விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு
புதுவை: தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு பிறகே கையெழுத்தானது. ஆனால் புதுவையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றபோதும் இன்னமும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. முதலில் திமுக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. இன்று ஒரு நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது.

புதுவை சட்டமன்ற தேர்தல்
புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு புறமும், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருபுறமும், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என மும்முனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை ஒரு நாளே இருப்பதால் தவெக சார்பில் 30 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு தொகுதி பங்கீடு முடிவடைந்தது. ஆனால் சில தொகுதிகளில் இன்னமும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதிமுகவுக்கு இந்த கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
17 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்
இது ஒருபுறம் இருக்க திமுக காங்கிரசிலும் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. பேச்சுவார்த்தை ஒரு வாரமாக நடந்தும், இன்று மாலை வரை தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் 17 இடங்களை எடுத்து கொண்டு தி.மு.க. வுக்கு 13 இடங்களை ஒதுக்கி அதில் விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதி கொடுக்கும்படி கூறியது.
ஆனால் 30 தொகுதிகளை சமமாக பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுக்க தி.மு.க. வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்கு தலைமை வகிப்பதால், கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என கூறியதால், உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் கூட்டணியை இறுதி செய்ய தி.மு.க. தலைமை உத்தர விட்டது.
திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி
சென்னை சென்ற புதுச்சேரி தி.மு.க. மேலிட தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வீட்டில் அவரை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூறினர். அப்போது ப. சிதம்பரமும் கூட்டணி நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலி னுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இரவில் திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டி என்றும் திமுக 12 தொகுதிகளில் போட்டி என்றும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது. விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications