Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட் அவுட் காங்கிரஸ்..ஒரே வார்த்தையில் முடித்த ஸ்டாலின்! இறங்கி வந்த கதர்கள்..பஞ்சாயத்து பேசும் ப.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் டெல்லி தலைமைக்கும் திமுக தலைமைக்கும் மோதல் வெடித்திருக்கும் நிலையில் சமாதானம் செய்ய உள்ளூர் தலைகள் களமிறங்கியுள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில் சுமார் 40 தொகுதிகள், மேலும் இரு ராஜ்யசபா எம்பி சீட் வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கும் கோரியதாக கூறப்பட்டது. அதேவேளை, திமுக கடந்த தேர்தலில் அளித்த தொகுதி எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு குறைவான 28 இடங்களையே வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இந்த முரண்பாடே கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கியது.

Tamil Nadu Assembly Election 2026 DMK Congress P Chidambaram

திமுக காங்கிரஸ் கூட்டணி

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை கூட்டணி விவகாரங்களில் தலையிடாத காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திடீரென களமிறங்கியுள்ளார். இந்த ஆலோசனையில் ப.சிதம்பரத்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் கலந்து கொண்டார். திமுக தரப்பில் எம்.பி. கனிமொழியும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைத்ததாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு பிரச்சனை

இந்நிலையில், பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத போதிலும், திமுக தரப்பில் 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா இடங்கள் வழங்கும் ஆஃபர் முன் வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது ஆரம்பத்தில் பேசப்பட்ட 25 தொகுதிகளை விட அதிகமானதாக கருதப்படுகிறது. எனினும், இறுதி முடிவை டெல்லி காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என தகவல்கள் சொல்கின்றனர்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் ப.சிதம்பரம் ஊடகங்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றதும் கவனிக்கத்தக்கது.

ப சிதம்பரம் சந்திப்பு

அவர் பேச்சுவார்த்தை விவரங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியிடம் தெரிவிப்பார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கூட்டணி தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முன்னதாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர், தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திமுக 25 இடங்களையே வழங்க முன்வந்துள்ள சூழலில் எப்படிப்பட்ட முடிவு எடுக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன.

புதிய கூட்டணி

அதற்கு பலர், கூட்டணியை விட்டு விலகுவது அரசியல் ரீதியாக பாதகமாக அமையலாம் என்ற கருத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. சிலர், கூட்டணியை முறித்தால் அது எதிரணிகளுக்கு சாதகமான சூழல் உருவாக்கும் என்றும், தமிழகத்தில் அரசியல் கணக்குகளை பாதிக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய கூட்டணி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் சிலர் சொன்னதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தவெக கூட்டணி குறித்து பரிசீலனை செய்யும் முன் தற்போதைய கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே சிறந்தது என்ற கருத்து மேலோங்கியதாக தெரிகிறது.

காங்கிரஸ்

திமுக தரப்பிலும் கூட்டணியை சுமுகமாகத் தொடர விருப்பம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், இரு தரப்பும் பேசிக்கொண்டு தீர்வு காண விரும்புகின்றன என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தற்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதே நல்ல முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ளார். இது இரு தரப்பும் மோதலை விட சமரசத்தையே விரும்புகின்றன என்பதைக் காட்டுவதாக சொல்கின்றனர் திமுகவினர்.

அதிமுக - பாஜக

இந்நிலையில், கூட்டணி தொடருமா? அல்லது உடையுமா? என்பது திமுகவும், காங்கிரசும் தான் அறிவிக்கும். ஆனால் சமீபத்திய சந்திப்பு மற்றும் அதன் பின்னர் வெளியாகியுள்ள தகவல்கள், இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யும் முடிவை நோக்கி நகர்கின்றன என்பதைக் காட்டுவதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜகவை எதிர்கொள்ள ஒன்றிணைந்த அணியாக செயல்படுவது தான் இரு கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+