கணிப்பெல்லாம் பொய்.. இனி பிரசாந்த் கிஷோருக்கு "நோ".. திமுக கண்டுபிடித்த புது மாஸ்டர்மைண்ட்! ட்விஸ்ட்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் பலரின் அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வரலாம். அண்ணாமலை தொடங்கி ஸ்மிருதி இரானி வரை பலருக்கு இந்த தோல்வி அரசியல் அஸ்தமனமாக கூட மாறலாம். ஆனால் கட்சி அரசியலில் இல்லாத இன்னொருவருக்கும் இந்த தேர்தல் முடிவுரையை எழுதி உள்ளது...அவர் பிரசாந்த் கிஷோர்!
2024 லோக்சபா தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் மிக மோசமான தோல்வியை தழுவின., என்னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம்.

அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம். மோடிக்கு மெஜாரிட்டி கிடைக்கும். சமயங்களில் அவர்கள் எடுத்த 303 என்பதை விட கூடுதலாக தனியாக எண்கள் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதுதான் முடிவாக இருக்க போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை. உத்தர பிரதேசத்தில் பாஜக கிளீன் ஸ்வீப் செய்யும்.
மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக்கருத்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடிஜி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் முன்பை விட கூடுதல் இடங்களை கூட பெற்று அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன , என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.
தோல்வி; ஆனால் அவரின் கணிப்பை பொய்யாக்க பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்து உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம்.
முக நோ: இந்த நிலையில்தான் திமுக பிரசாந்த் கிஷோரிடம் இருந்து மொத்தமாக விலக முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அவர் திமுகவுடன் பணியாற்றினார். இதையடுத்து மீண்டும் அவருடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. 2026 தேர்தலுக்கு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் திமுகவிடம் இப்போது pen அமைப்பு உள்ளது. அந்த அமைப்பை நடத்துவதே சபரீசன்தான். அவர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் முறையாக திட்டங்களை வகுத்து வேட்பாளர் தேர்வில் முறையான தலையீடுகளை செய்து திமுக வென்றது.
இதனால் சபரீசனின் pen அமைப்புடன் தொடர்வதே சரியாக இருக்கும். அதுவே பாதுகாப்பாகவும் இருக்கும் என்று திமுக முடிவு செய்துள்ளதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications