97 லட்சம் வாக்குகள்.. உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய ஸ்டாலின்.. திமுக போடும் மெகா திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி இருக்கும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR பணிகள், டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்களும், கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்களும், திருப்பூரில் 5.63 லட்சம் வாக்காளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ள வாக்காளர் திருத்தப் பட்டியல் என்பதால், சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 39 சதவிகித வாக்குகளும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதிகளில் 35 சதவிகித வாக்குகளும் நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிகளில் திமுகவினர் ஈடுபட்டும் சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு வீடாக சென்று சரி பார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை திமுக தரப்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications