DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், முதியோர் உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

dmk-election-manifesto-cm-stalin-announced-that-the-old-age-pension-would-be-increased-to-rs-2-000

இதில், காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு முதல் விரிவாக்கம் செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு நவீன பம்பு செட் அமைத்து தரப்படும். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத் தொகை ரூ. 1500 ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ. 1200 ஆக வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை இனி 2 ஆயிரமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியானது முதியோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுய உதவி குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு மானியமும் வழங்கப்படும் என்பதையும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்தார். இதுமட்டுமல்லாமல் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மருத்துவ காப்பீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

மருத்துவக் காப்பீட்டு தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும். கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்ட்டு வரும் ஆயிரம் ரூபாய் இனி ரூ.1,500 ஆகு உயர்த்தி வழங்கப்படும். உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+