சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கறுப்பு ஆடு" சிக்குகிறது.. ரகசிய ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. இருக்கு, கச்சேரி இருக்கு.. என்னாச்சு?

திமுக மேலிடம் போட்ட உத்தரவால் பொறுப்பாளர்கள் கதிகலங்கி உள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைமையானது, கட்சி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான உத்தரவு ஒன்றினை ரகசியமாக பிறப்பித்துள்ளது.. இதைக் கேட்டு, நிர்வாகிகள் தரப்பு வெலவெலத்து போயிருக்கிறார்களாம்..!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக..

சில இடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆனது.. இது தொடர்பான வருத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்கு.

'திமுக, அதிமுக மக்களை முட்டாளாக்குகிறது'.. 'நீட்' விவகாரம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் சுளீர்! 'திமுக, அதிமுக மக்களை முட்டாளாக்குகிறது'.. 'நீட்' விவகாரம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் சுளீர்!

சறுக்கல்

சறுக்கல்

குறிப்பாக, கொங்கு மண்டலம் திமுகவை சறுக்கிவிட்டது.. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த எம்பி தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது... அதாவது, திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய இடங்களிலும் அதிமுக வெற்றிபெற்றது.. இதற்கு, உள்ளடி வேலைகள் மற்றும் களப்பணிகளை மூத்த நிர்வாகிகள் யாரும் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பின..

அதிருப்தி

அதிருப்தி

அதிருப்தி காரணமாக சீட் கிடைக்காதவர்கள் சுணங்கி போய்விட்டார்கள் என்றும், சில தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவின் கறுப்பு ஆடுகள் வேலை பார்த்ததாகவும் கூறப்பட்டது.. அதனால்தான் திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அப்போதே ஒரு ரிப்போர்ட் கேட்டிருந்தார்.. அதன்படி சில களையெடுப்பு நடவடிக்கையையும் எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 லிஸ்ட் ரெடி

லிஸ்ட் ரெடி

இப்போது விஷயம் என்னவென்றால், நடக்க போகும் ஊரக நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, பல இடங்களில் அக்கட்சி நிர்வாகிகள் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. இதனால் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்... இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருச்சியில் 54வது வார்டில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்திக்கும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மூவேந்தனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது..

அதிருப்திகள்

அதிருப்திகள்

2 பேருமே விட்டுகொடுக்க முன்வராத நிலையில், இவர்களுக்குப் பதிலாக வட்டச் செயலாளர் புஷ்பராஜ் என்பவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ராமமூர்த்தி சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டார்.. இப்படி எத்தனையோ மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக நிர்வாகிகள் களமிறங்கி உள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதனால் மறுபடியும் முதல்வர் ஸ்டாலின் கையில் சவுக்கை எடுத்துள்ளார்.. வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.. இன்று மாலை இறுதி வாக்காளர்கள் பட்டியல் ரிலீஸ் ஆகும்.

 திமுக வேட்பாளர்கள்

திமுக வேட்பாளர்கள்

இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் களமிறங்குகிறார்களா? அப்படி போட்டியிட்டால் அவர்களை பற்றிய முழு விபரத்தினையும் அறிவாலயத்துக்கு இன்று இரவுக்குள் அணுப்பி வைக்குமாறு மாவட்ட திமுக பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம்.. இது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் திமுக மாவட்ட செயலாளர்கள்.

அதிமுக

அதிமுக


இந்த விஷயம் அறிந்த கூட்டணி கட்சிகள், "கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கினால் திமுக ஆக்‌ஷன் எடுக்குமா? அட்லீஸ்ட் எங்க குறையை கேட்கவாவது அறிவாலயம் காது கொடுக்குமா?" என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்களாம்.. இன்னொரு பேச்சும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. திமுகவில் அணிவகுத்துள்ள அதிருப்தி வேட்பாளர்களால், அதிமுக தரப்பு செம குஷியில் உள்ளதாம்.. சட்டமன்ற தேர்தலில் விட்டதை இந்த மாநகராட்சி தேர்தலில் ஈடு செய்வோம் என்று சொல்லி வருகிறார்களாம்..

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஆனால், இதற்கு திமுக தரப்பு என்ன சொல்கிறது தெரியுமா? "அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சுயேட்சையாக இருப்பதால் எந்தவித பிரயோஜனமும் கிடையாது.. அவர்கள் வெற்றிப் பெற்ற பிறகு, எப்படியும் மறுபடியும் திமுகவிற்கே வந்துவிடுவார்கள்.. அதனால் மேயர் பதவியை திமுக கைநழுவி விட வாய்ப்பே இல்லை" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்களாம்.. பார்ப்போம் என்ன நடக்க போகிறதென்று..!

English summary
DMK is currently facing an internal party conflicts and so CM MK Stalin has secretly issued a very important order to the party executives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X