"பெரியண்ணன் திமுக".. கலங்கிய கூட்டணி கட்சிகளுக்கு.. அதிமுகவால் அடித்த ஜாக்பாட்.. அறிவாலயம் அதிருதே
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி உடைந்ததில் திமுகவுக்கு நெருக்கடியும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு உற்சாகத்தையும் தந்திருக்கிறது என்று திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள திமுக கட்சி தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரிசையாக அடுத்தடுத்து பூத் கமிட்டி கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. நேற்றே கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் எங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக இல்லாமல் போட்டியிடுவோம்.
தனியாக புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. இந்த கூட்டணி முறிவால் திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி உடைந்ததில் திமுகவுக்கு நெருக்கடியை தந்து உள்ளதாம். மேலும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உற்சாகத்தையும் தந்திருக்கிறது என்று திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அப்படி என்ன நடந்தது?: நாடாளுமன்ற தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட திமுக தீர்மானித்திருந்தது. தனது கூட்டணி கட்சிகளில் காங்கிரசுக்கு 5 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு தலா 1 சீட்டும் ஒதுக்கவே முடிவு செய்திருந்தார் மு.க.ஸ்டாலின்.
அதாவது கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 இடங்கள், மற்ற விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுத்தது திமுக. இந்த முறை அதில் பாதி மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்தது. அதாவது முன்பு கொடுத்ததில் பாதிக்கு பாதி கொடுக்க மட்டுமே திமுக நினைத்துள்ளது.
அதனால்தான், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகள் அமைத்துள்ள பூத் கமிட்டி லிஸ்ட்டை கேட்டு சமீபத்தில் திமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதாவது, கூட்டணி கட்சிகளின் உண்மையான செல்வாக்கை அறிந்து கொள்வதற்காகவே இந்த அறிவுறுத்தல். ஆனால், கூட்டணி கட்சிகள் இந்த அறிவுறுத்தலை ரசிக்கவில்லை.
திமுக பெரியண்ணன்: பெரியண்ணன் திமுகவை பகைத்துக் கொள்ள முடியாததால் உள்ளுக்குள் பொருமிக்கொண்டுதான்இருந்தன. இந்த நிலையில்தான், அதிமுக-பாஜக கூட்டணி உடைந்ததால், ஏகத்துக்கும் உற்சாகமடைந்துள்ளன. அதாவது, திமுகவிடம் தங்களுக்கான சீட்டுகளின் எண்ணிக்கையையும் தொகுதியையும் அழுத்தம் கொடுத்து பெற முடியும் என்றும், ஒருவேளை திமுக தரமறுத்தால் அதிமுக கூட்டணிக்கு தாவிவிட வாய்ப்புகள் இருப்பதைச் சொல்லியே தங்களின் பேரத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் நம்புவதால் கூட்டணி கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன.
அதேசமயம், திமுக தலைமையோ அதிர்ச்சியடைந்துள்ளது. அதாவது, தனது கூட்டணி கட்சிகளுக்கு கூட்டணி அமைக்க வேறு வலிமையான கட்சி இல்லை என்பதால் நாம் ஒதுக்கும் சீட்டை மட்டுமே வாங்கிகொள்ளவேண்டும் என்று கூட்டணி கட்சிகளை எடைப் போட்டுக்கொண்டிருந்தது திமுக தலைமை. ஆனால், இப்போது அந்த கட்சிகளுக்கு கூட்டணி அமைக்க அதிமுக என்ற கட்சி இருப்பதால்தான் இந்த அதிர்ச்சி.
பாஜக-அதிமுக கூட்டணி முறிந்ததால் கூட்டணி கட்சிகளின் சீட் பேர நெருக்கடிக்கு ஆளாக வேண்டுமே என்பதுதான் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதனை எப்படி திமுக தலைமை சமாளிக்கப்போகிறதோ? அதில்தான் அதன் அரசியல் ஆளுமை இருக்கிறது என்கிறார்கள் திமுக மா.செ.க்கள் !
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications