அண்ணே.. உங்க வயசுக்கு.. திமுகதான் சரி.. கடைசி வரை போராடிய திமுக டீம்? மனம் இறங்காத செங்கோட்டையன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இன்று தவெகவில் இணையும் முன்நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தீவிரமாக முயன்ற திமுக
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் செங்கோட்டையன். கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் அவரின் பதவி பிரிக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாக ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு இடையே சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று, செங்கோட்டையன் தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவுடன் நேரடியாகப் பேசியதுடன், மேலும் சில தி.மு.க. மூத்த உறுப்பினர்களுடன் தொலைபேசியிலும் உரையாடியுள்ளார். அப்போது எங்கள் கட்சிக்கு வந்துடுங்க தலைவரே.. நீங்க பெரிய நபர்.. மூத்த அரசியல்வாதி.
நீங்கள் உங்கள் மரியாதைக்கு நிரூபிக்கப்படாத கட்சியில் இணைவது சரியாக இருக்காது. நம்முடைய கட்சிக்கு வாங்க. திமுகவில் மரியாதை கிடைக்கும். பதவியும் கிடைக்கும். அதிமுகவில் இருந்து திமுக வந்த எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக வளர்ந்து உள்ளனர். பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதோடு அவர்களுக்கு கட்சியில் நல்ல வாய்ஸ் உள்ளது.
அதேபோல் நீங்கள் வந்தாலும் திமுகவில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தவெக போனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். ஆனால் பதவி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தவெக ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் யோசித்து முடிவெடுங்கள் என்று கூறி உள்ளனர்.
செங்கோட்டையன் காரணம்
இதற்கு செங்கோட்டையன் சொன்ன காரணம்தான் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நம்ம ஏரியாவில் திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். நானும் வந்தால் ஒன்று எனக்கு குறைந்த பவர் இருக்கும். அல்லது அவர்களுக்கு குறைந்த பவர் இருக்கும். அது சரிப்பட்டு வராது. சிலர் அதில் என்னுடைய உறவினர்கள் வேறு. திமுகவில் இருந்தாலும் நல்ல உறவை பேணி வருகிறேன்.
நான் திமுகவிற்கு வந்து.. பின்னர் அவர்கள் உடன் உட்கட்சி மோதல்.. அதிகார போட்டி வந்துவிடக்கூடாது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறேன். அவர் எதிர்த்த திமுகவில் என்னுடைய கடைசி கால அரசியலில் சேர்வது சரியாகவும் இருக்காது. அதோடு எனக்கு வழிகாட்டும் சிலர் நான் திமுக பக்கம் செல்வதை விரும்பவில்லை என்று செங்கோட்டையன் காரணம் கூறி உள்ளாராம்.
மனம் இறங்காத செங்கோட்டையன்
திமுகவில் இருந்து பலர் முயன்றும் கூட.. இரவு வரை போனில் பேசியும் கூட செங்கோட்டையன் மனம் இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலையே அவர் விஜயிடம் வாக்கு கொடுத்துவிட்டாராம். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications