களம் மாறுது.. திமுக பாஜக ரகசிய உறவு.. ராகுலை கூப்பிடாம ராஜ்நாத் சிங் ஏன்? அதிமுக ஜெயக்குமார் சுளீர்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தான் ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கு செல்வது, மத்திய ராஜ்நாத் சிங்கை கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைப்பது என பாஜகவுக்கு கூஜா தூக்கும் அரசாக திமுக மாறியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "தேர்தல் எப்போது வந்தாலும் அதை உடனடியாக சந்திக்க தயாராக இருக்கிறது அதிமுக. விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக களப்பணியாற்றவும், வெற்றி பெறுவதற்கும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
2026 சட்டப்பேரவை தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியூகம் வகுத்து, அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் தேநீர் விருந்து மரபுப்படி நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அதிமுக பங்கேற்றது. ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த திமுக, அரசு சார்பில் விருந்தில் பங்கேற்பதாக கூறி முதல்வர் ஸ்டாலின் மற்றும் 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்டாலின் வேறு, திமுக வேறா? ஏன் எட்டு அமைச்சர்கள் வரிந்துகட்டிக் கொண்டு தேநீர் விருந்துக்கு சென்றார்கள்?
வரும் 18 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ராஜ்நாத் சிங்கை அழைத்த அரசு, ஏன் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதன் மூலம் திமுக பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
அதனால்தான் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தான் தேநீர் விருந்துக்கு செல்வது, ராஜ்நாத் சிங்கை அழைப்பது என பாஜகவுக்கு கூஜா தூக்கும் அரசாக திமுக மாறியுள்ளது.
திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் 40 பேருக்கும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் ஜெ.பி.நட்டா, விருந்து வைக்கிறார். எனவே, பாஜகவுக்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு இருந்து வருகிறது. இதை சிறுபான்மை மக்கள் உணர்ந்துள்ளனர். கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது" என்று தெரிவித்துள்ளார்.
-
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications