திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
திமுக கட்சியில் சென்னையில் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் ஆயிரம் விளக்கு உசேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று முதல்முறை தோல்வி அடைந்த இவர், பின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார்.

அதிலிருந்து இவர் ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்டார். சென்னையில் திமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்க இவரின் பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏ பதவி மட்டுமில்லாமல், கட்சி தொடர்பான பல்வேறு பணிகளிலும் அவர் ஈடுப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைமை நிலைய செயலாளராகவும் ஆயிரம் விளக்கு உசேன் பணியாற்றினார்.
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். சென்னை லாயிட்ஸ் காலனியில் அவர் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.
இன்று மாலை அவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications