யாரும் எதிர்பார்க்காத இழப்பு.. திடீரென சோகமான அண்ணா அறிவாலயம்! மு.க.ஸ்டாலின் கண்ணீர்!
சென்னை: திமுக முன்னாள் எம்பி அப்துல்லாவின் தாயார் நபீசா பீவி (வயது 85) உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
பாசத்துடன் வளர்த்து சான்றோனாக்கி மகிழ்ந்த அன்னையை இழந்து வாடும் தம்பி அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினேன் என்று மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டு வந்த நபீசா பீவி, இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.
திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு, "கழக அயலக அணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு. எம்.எம். அப்துல்லா அவர்களின் அன்புத் தாயார் திருமிகு. நபீசா பீவி அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்புடனும் பாசத்துடனும் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னையை இழந்து வாடும் சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார். திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
