தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி!
சென்னை: ஒன் இந்தியா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக நிர்வாகிகளான தமிழன் பிரசன்னா மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இருவரும் பதில் அளித்தனர். அதிலும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பிரச்சனைகளில் திமுக அமைதி காப்பதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தமிழன் பிரசன்னா உரிய பதில்களை கொடுத்தார்.
திமுக - விசிக இடையிலான தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக ஒன் இந்தியா விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இளைஞர்கள் பட்டாளம் அரங்கில் வந்து திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியது.

இதில் தமிழன் பிரசன்னாவை நோக்கி நெல்லை அஜித் குமார் சாதி ஆணவப் படுகொலை, வேங்கைவயல் விவகாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள், வன்கொடுமைகள், நாங்குநேரி விவகாரம், தலித் பிரச்சனைகளில் திமுகவின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த வீடியோவை விரிவாக பார்க்க கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று காணலாம்.












Click it and Unblock the Notifications