துரைமுருகனுக்கு கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த நிலையிலும் துரைமுருகனுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று வராது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது ஒருவேளை நோய் தொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு சிறிய அளவுக்கு இருக்கும் என்று சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது இந்த நேரத்தில் நினைவு கூரத்தக்கது.

காட்பாடி தொகுதி
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதிகள் போட்டியிடுகிறார் துரைமுருகன். இதையொட்டி அவர் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார் . எனவே பொதுமக்களை அதிக அளவுக்கு சந்திக்க வேண்டியதாக இருந்தது. கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டியதாக இருந்தது.

இரு டோஸ்
85 வயதானவர் துரை முருகன் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் . மொத்தம் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்த நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொரோனா சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் தனிமை
திமுக தலைவர் ஸ்டாலின் சோதனை செய்து கொண்டார். இதேபோல துரைமுருகன் சோதனை செய்ததில் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் அற்ற வகையில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்படுவதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ஸ்டாலினுக்கு நெகட்டிவ்
அதேநேரம் ஸ்டாலினுக்கு நோய் தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. துரைமுருகனுடன் பழகியவர்கள் அனைவரும் தங்களுக்கு பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களை இப்போதே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கனிமொழி
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். முழு கவச உடையுடன் தேர்தல் நாளில் அவர் ஓட்டு போட்டார். 5 நாட்களுக்குள் அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல துரைமுருகன் விரைவாக குணமடைய தொண்டர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications