இளைஞர்களை போதைப்பெருள் கும்பலிடம் ஒப்படைத்த திமுக.. ஸ்டாலின் மீது பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்'
சென்னை: ‛‛திமுக அரசு நமது இளைஞர்களை போதைப்பொருள் கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. போதைப்பொருளில் இருந்து மீட்க வேண்டிய கடமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் போதைப்பொருளில் இருந்து தமிழகத்தை மீட்கும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இந்நிலையில் தான் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ஜெயலலிதாவை புகழ்ந்த நிலையில், தற்போதைய திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது: ‛‛ திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் மதுபான குற்றவாளிகள் திமுக ஆட்சியில் செழிப்பாக இருக்கிறார்கள். ஆனால் என்டிஏ மக்கள் உடல்நலனில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. என்டிஏவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் போதைப்பொருளில் இருந்து தமிழகத்தை மீட்கும்.
தமிழகத்தில் தற்போது குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பாட்டில் ஆனால் இப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. என்டிஏ அரசு தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications