"குடும்ப நலனுக்காக டெல்டா விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது.." எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
சென்னை: தன் குடும்பம் பதவியில் இருக்க நினைப்பவர்களுக்கு அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை என்றும், திமுகவை போல் சந்தர்ப்பவாதியாக அதிமுக இருக்காது என்றும் மாநில உரிமையை எந்த சூழ்நிலையிலும் அதிமுக விட்டுக்கொடுக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து, கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையைவிட, 8 சட்டமன்ற உறுப்பினர்களை கூடுதலாகப் பெற்றதால் தமிழகத்தைப் பிடித்த பிணி இந்த விடியா திமுக ஆட்சி என்று மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரியில் தண்ணீர் பெறும் உரிமையை உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பெற்று, ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் டெல்டா பாசனத்திற்கு பங்கு நீர் கிடைக்கப்பெற்று எங்களது ஆட்சியில் சம்பா, குறுவை சாகுபடி சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. ஆனால், விடியா திமுக அரசு இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்குத் திட்டமிடாமல் தன் ஆட்சியின் சாதனையைக் காட்டுவதற்காக, ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
விடியா திமுக அரசு கூறியதை நம்பி 5:5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர் செய்யப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறக்காத காரணத்தால் சுடை மடை வரை தண்ணீர் சென்று சேராமல், ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர் கருகியது. மேட்டூர் அனைாயின் நீர்மட்டம் குறையத் தொடங்கியதாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகத்தில் இருந்து பங்கு நீரை பெறாததால் 4.5 லட்சம் ஏக்கர் பயிர் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதலமைச்சர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால், டெல்லி நிர்வாக மசோதாவிற்கு தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தன் மாநில உரிமைக்காக கூட்டணியில் இடம்பெற்றார்.
அதே அடிப்படையில், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் டெல்டா பகுதி விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் உச்சநீதிமன்ற வலுவான தீர்ப்பின்படி, தமிழக பாசனத்திற்கு கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரியில் வழங்க வேண்டிய பங்கு நீரை வழங்கினால்தான், பெங்களூருவில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று நிர்பந்தப்படுத்தி இருந்தால், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்கும்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இது, டெல்டா விவசாயிகளுக்கு விடியா திமுக அரசு செய்த மிகப் பெரிய துரோகமாகும். தன் குடும்பம் பதவிகளில் இருக்க வேண்டும்; தன் குடும்பத் தொழில்கள் கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யாமல் திரு. ஸ்டாலின், தான் தேசியத் தலைவர் என்ற பிம்பத்தை காட்டிக்கொள்வதற்காக ஏதேதோ பிற மாநில பிரச்சனைகளைத் தொடர்ந்து கூறி வருகிறார். மாநில உரிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது. தி.மு.க-வைப் போல் பதவி சுகத்திற்காக சந்தர்ப்பவாதியாக எப்போதும் இருக்காது.
ஆட்சியில் இருக்கும் எஞ்சிய காலத்தில், இனியாவது மக்களுக்கு நல்லது செய்ய விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சிந்திக்கட்டும். திசை திருப்புவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சீண்ட வேண்டாம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்












Click it and Unblock the Notifications