பிராமணியத்தை திமுக எதிர்த்ததால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆக முடிந்தது: ஆர்.எஸ். பாரதி பொளேர்
சென்னை: "திமுக பிராமணர்களுக்கு எதிரி கிடையாது.. பிராமணியத்துக்குதான் எதிரி.. அப்படி அந்த தியரியை நாங்கள் வகுத்ததால்தான், அண்ணாமலையே ஒரு ஐபிஎஸ்ஸாக வந்திருக்கிறார்.. ஆடு, மாடு மேய்த்த அண்ணாமலை போன்றவர்களை, ஐபிஎஸ் ஆக்கியது திராவிட இயக்கம்தான்" என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி காட்டமாக கூறியிருக்கிறார். நம்முடைய "ஒன் இந்தியா தமிழுக்கு" அளித்த சிறப்பு பேட்டியில், அண்ணாமலையை கடுமையாகவும் ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருக்கிறார்கள். இது ஒரு சரித்திர நிகழ்வாகும். நாசிக்கள் எந்தளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ, அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பைக் கடைப்பிடித்து வருகிறது.

இதை நான் ஏஎன்ஐ பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன்.. இதை சொல்ல எனக்கு துளியும் பயம் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள்.
மடாதிபதிகள்: எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் தங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நல்லவர்கள் இருக்கிறார்கள். பிராமணர்களை வைத்து இங்கு ஒரு மிகப்பெரிய அரசியலே நடந்துகொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று கூறியிருந்தார்.. அண்ணாமலையின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்எஸ். பாரதியை ஒன் இந்தியா தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம்.. அவரிடம் அண்ணாமலை சொன்ன கருத்தையும் முன்வைத்தோம்.. பிராமணர்களையும், மடாதிபதிகளையும் திமுக ஒடுக்குகிறதா? என்ற கேள்வியை எழுப்பினோம்.. அதற்கு மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்தான் இவை:
ஜெயலலிதா: "அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசியலின் அடிப்படையே தெரியல.. தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா என்று ஒரு அம்மா, 10 வருஷமா இருந்தாங்க.. அந்தம்மா சட்டசபையிலேயே நான் ஒரு பாப்பாத்தின்னு சொன்னாங்க.. நாங்க அந்த சமயத்தில் ஒடுக்கியிருந்தால், அந்தம்மா வந்திருக்க முடியுமா? இதுகூட தெரியாமல் அண்ணாமலை, இந்த ஊரில் வந்து அரசியல் பண்ணிட்டு இருக்கார்..
ஜெயலலிதா என்ற அம்மா, இந்த தமிழ்நாட்டை ஆண்டார் என்பதாவது அண்ணாமலைக்கு தெரியுமா? அந்தம்மா "பிராமின்" என்றாவது அண்ணாமலைக்கு தெரியுமா? அந்தம்மா பகிரங்கமாக சட்டமன்றத்தில் நான் ஒரு "பாப்பாத்தி" என்று சொன்னதாவது அண்ணாமலைக்கு தெரியுமா? திமுக பிராமணர்களுக்கு எதிரி கிடையாது.. பிராமணியத்துக்குதான் எதிரி.. அதை முதலில் அண்ணாமலை புரிஞ்சிக்கணும்..

தியரி: அப்படி அந்த தியரியை நாங்கள் வகுத்ததால்தான், அண்ணாமலையே ஒரு ஐபிஎஸ்ஸாக வந்திருக்கிறார்.. இல்லாட்டி அவர் ஆடு, மாடுகளைதான் மேய்த்திருக்கணும்.. ஆடு, மாடு மேய்த்த அண்ணாமலை போன்றவர்களை, ஐபிஎஸ் ஆக்கியது திராவிட இயக்கம்தான்.. இதுக்கான காரணத்தையெல்லாம் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்..
1951-ல் இதுக்காக போராடி, இதுக்கான முதல் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்தோம்.. இதுக்கப்புறம்தான் அண்ணாமலையே பிறந்திருப்பார்.. பள்ளிக்கூடத்திலயும் அண்ணாமலை சேர்ந்திருக்கவும் முடியாது.. படிச்சிருக்கவும் முடியாது..
மடாதிபதிகள்: நாங்க பிராமணர்களை அழிச்சிட்டோமோ? எந்த பிராமணர்களை அழிச்சிட்டோம்? இதோ சிம்சன் இப்பவும் இருக்கு இல்லே? டிவிஎஸ் இருக்கு இல்லே? எத்தனை முதன்மை செயலாளர்கள் இங்கு இருந்தார்கள்? இப்பவும் இருக்கிறார்களே? ஜெயலலிதாவும் இருந்தாங்களே.. எல்லாரையும் நெருக்கடி தந்து அழித்து விட்டோமோ?
திமுக எப்போது ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கிறது.. இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாருமே பிராமணர்கள்தான்.. எனக்கு இன்னமும் பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள்.. நான் எத்தனையோ பிராமணர்களுடன் நெருக்கமாகவே பழகியும் வருகிறேன்.. இதெல்லாம் பலமுறை சொல்லியாச்சு.. அத்தனை முறை சொல்லியும் அண்ணாமலைக்கு புரியலேன்னா, என்ன பண்ண முடியும்?
எம்ஜிஆர்: நாங்க அப்பப்போ ஆட்சிக்கு வர்றோம், போறோம்.. அப்படின்னா எம்ஜிஆர் ஆட்சியில், ஆதீனங்கள் எல்லாம் ரோட்டில் மிட்டாய் தந்துட்டு இருந்தாங்களா? ஜெயலலிதா ஆட்சியில் ஆதீனங்கள் தெருத்தெருவா, காய்கறிகளை வாங்கிட்டு போயிட்டு இருந்தாங்களா? இப்பதான் திமுக ஆட்சியில் வெளியே வர்றாங்களா? மடாதிபதிகள் எல்லாம் இப்போதுதான் வெளியே வந்ததாக சொல்கிறாரே, அப்படின்னா, நாங்கள் எல்லாம் மடாதிபதிகளை பூட்டு போட்டா வைத்திருந்தோம்?
எங்க தலைவர் விழாக்களுக்கே மடாதிபதிகள் வந்து வாழ்த்துக்களை சொல்லிட்டு போயிருக்காங்க.. அதனால், அண்ணாமலை பேசும் பொய்களை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.. இப்போது அண்ணாமலைக்கு பிரச்சனை என்னவென்றால், தமிழக பாஜகவில் "பாஜக - பாஜக அல்லாதோர்" என்ற நிலைமை வந்துவிட்டது..
அண்ணாமலையோ, பிராமணர் அல்லாதவர்.. ஆனால், தமிழக பாஜகவில் உள்ள பிராமணர்கள் எல்லாரும் அண்ணாமலையின் அட்ராசிட்டியை பொறுக்க முடியவில்லை.. கஞ்சா விக்கிறவன், ரவுடிகளை எல்லாம், அண்ணாமலை கட்சியில் உறுப்பினர்கள் ஆக்கிவிட்டார்..

பாஜக கமலாலயம்: "கமலாலயம் என்பது புனிதமான இடமாயிற்றே.. இங்கே படித்தவர்கள், சிஏ படித்தவர்கள் போன்றோறெல்லாம் வந்து செல்லும் இடமாக இருக்கும்போது, கஞ்சா விக்கிறவன்,கள்ளச்சாராயம் விக்கிறவனை எல்லாம், அண்ணாமலை உள்ளே கொண்டுவந்துவிட்டாரே என்று பாஜகவிலேயே ஒரு சாரார் குமுறுகிறார்கள்.. அதனால், அவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் விதமாகவே அண்ணாமலை இப்படி சொல்லியிருக்கலாம்..
திமுக பிராணமர்களுக்கு எதிரானது கிடையாது என்பதை மறுபடியும் சொல்கிறேன்.. இன்னைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிற தனியார் கம்பெனிகளை நடத்துவது யார்? இந்தியா சிமெணட்ஸ் நடத்துவது யார்? இவங்களெல்லாம் யார்? இவர்களை ஒடுக்கியிருந்தால் ஜெயலலிதா வந்திருக்கவே முடியாதே.. சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன் யார்? இன்னும் எவ்வளவோ பேர் பொறுப்பில் இருக்கிறார்கள்.

பொதுக்கூட்டம்: இதையும் மீறி, பிராமணர்களுக்கு எதிராக ஆண்டாண்டு காலமாக திமுக இருக்கிறது என்று அண்ணாமலை தொடர்ந்து சொல்வாரேயானால், அருள்கூர்ந்து ஒவ்வொரு ஊரிலும் அண்ணாமலை பொதுக்கூட்டம் போடட்டும்.. அந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையே பேச வேண்டும்..
"நாங்கள் பிராமணர்களை ஆதரிக்கிறோம்.. எங்களுக்கு மற்றவர்கள் ஆதரவு தேவையில்லை.. இவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டர்கள் என்று சொல்லிக்கொண்டே ஊரை ஏமாற்றுகிறார்கள்.. நாங்கள் பிராணமர்களை மட்டுமே கட்சிக்குள் வைத்திருப்போம்.. இதுதான் பாஜகவின் கொள்கை" என்று மேடையில் அண்ணாமலை பகிரங்கமாக சொல்லட்டும். இப்படி அவர் சொன்னால், எங்களுக்கு ரொம்ப நல்லது.. அதை வரவேற்கிறோம்
வீராசாமி: மற்றபடி, அண்ணாமலை பொய் சொல்வதில் ரொம்ப திறமைசாலி.. உயிரோடு இருக்கிற வீராசாமியையே செத்துட்டார்னு சொன்னவர் ஆயிற்றே.. அதனால், அவர் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம்.. கட்சிக்குள் நெருக்கடி அதிகமாக இருக்கு.. அதனால் அவர்களை திருப்திப்படுத்த ஏதேதோ பேசுகிறார்.. ஆனால், அவரை நிச்சயம் வெளியே அனுப்பிச்சிடுவாங்க.. முடிவும் பண்ணிட்டாங்க.. பிராமணர் லாபி பூராவும் என்கிட்ட இதை குமுறியே சொல்லிட்டாங்க" என்றார் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்











Click it and Unblock the Notifications