இது ’திராவிட மாதம்’.. அதிரடி திட்டங்களை வெளியிட்ட திமுக ஐடி விங்.. அசத்தும் டிஆர்பி ராஜா!
சென்னை: செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடப்படுவதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் அறிவித்துள்ளனர். இதற்காக ஐடி விங் தரப்பில் பல்வேறு ட்விட்டர் ஸ்பேசஸ், பயணம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ தலைமையில் திமுக அரசின் சாதனைகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் என தீவிரமாக இயங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் சமூக வலைதளங்களில் பதில் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பர் மாதம் திராவிடம் மாதமாக கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் பெரியார், அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதால் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது.

திராவிட மாதம்
இதனால் திராவிட மாத கொண்டாட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, சமூக வலைதளங்களில் திராவிடம் குறித்த சிறு பதிவுகள், வீடியோக்கள், விரிவான கட்டுரைகள் வெளியிடப்படும் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கூறி உள்ளனர்.

ட்விட்டர் ஸ்பேசஸ்
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸ்-ல் திமுகவின் மூத்த தலைவர்கள் திராவிட இயக்க சாதனைகள் பற்றி உரையாற்றுவார்கள் என்றும் திமுக ஐடி விங் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், சொற்பொழிவாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்
அதேபோல் திராவிட இயக்கத்தின் வரலாற்று அடையாளங்களை நேரில் அறியும் வகையில் திராவிடத் தடம் எனும் பயணம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதேபோல் இளைஞர்கள், மாணவர்களுக்காக திமுக குறித்து முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர் அணி பயிற்சி பாசறை
அண்மையில் தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்க மூத்த தலைவர்கள் மூலம் இளைஞரணி சார்பாக திராவிட பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது அடுத்தபடியாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் திராவிட கொள்கைகளை கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications