அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. தமிழக அரசியல் வட்டாரத்திலும், பாஜக உட்கட்சி வட்டாரத்திலும் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த புகைச்சல், இப்போது டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், அக்கட்சியின் முக்கிய முகமுமான அண்ணாமலை, திடீரென டெல்லிக்கு அடியெடுத்து வைத்ததன் பின்னணியில் இருந்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக கசியத் தொடங்கியுள்ளன.

மாநில தலைமை பதவி மாற்றத்திற்கு பிறகு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்திருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இதுவரை எந்தப் பதவியும் வழங்கப்படாததாலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அண்ணாமலை எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படாததாலும் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

Annamalai New Role Annamalai Amit Shah BJP Tamil Nadu

அண்ணாமலை விவகாரம்

இதன் காரணமாகவே அவர் தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபடாமல் பெயரளவிற்கே பங்கேற்றார் என்றும், அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் தகவல்கள் வெளியாகியவண்ணம் இருந்தன.

பொறுப்புகள் மறுக்கப்பட்டதால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரைத் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் அமைதி காத்து வந்தார். ஆனால், கடந்த வாரம் பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அவர் திடீரென அறிக்கை வெளியிட்டது, அவர் கட்சியை விட்டு வெளியேறப்போகிறார் என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக்கியது.

அமித்ஷா இன்று முடிவு

இந்த சூழலில், சென்னை ஏர்போர்ட்டிற்கு பாஜக கொடி இல்லாத காரில் வந்த அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 2 நாட்களில் விரிவாகப் பேசுவதாகக் கூறிவிட்டு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது 5 பக்க ராஜினாமா கடிதத்தையும் வழங்கியிருக்கிறார்.. கடிதத்தை சமர்ப்பித்த கையோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து, தான் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தேன் என்பது குறித்தும், தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் வட்டாரத்திலும் தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த டெல்லி பஞ்சாயத்தின் பின்னணியில், பாஜக தேசிய தலைமை அண்ணாமலையின் ராஜிநாமா கடிதத்தை ஏற்க மறுத்ததற்கான மிக முக்கியமான காரணங்கள் இப்போது கசிய துவங்கி உள்ளன.

தனிக்கட்சி அறிவிப்பு

தமிழகத்தில் அண்ணாமலைக்கு என்று ஒரு தனிப்பட்ட பிரம்மாண்டமான இளைஞர் படையும், தீவிரமான ஆதரவாளர் வட்டமும் மிகக்குறுகிய காலத்தில் உருவாகியுள்ளது என்பதை டெல்லி மேலிடம் நன்கு உணர்ந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர் முற்றிலும் கட்சியை விட்டு வெளியேறினால் அது தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாகப் பெற்ற ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் எனத் தேசியத் தலைமை கடுமையாக அஞ்சுகிறதாம்.

அண்ணாமலைக்கு புதிய பதவி?

அதனால்தான் அண்ணாமலையின் பிடிவாதமான ராஜினாமா முடிவை திட்டவட்டமாக நிராகரித்துள்ள அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரைத் தொடர்ந்து பாஜகவிலேயே தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, தேசிய அளவில் ஒரு மிக முக்கிய அதிகாரமிக்கப் பொறுப்பை வழங்க உடனடியாக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு முன்னரே பலமுறை அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தொடர்ந்து தகவல்கள் பரவிய போதிலும், நடைமுறையில் அவருக்கு எந்த விதமான பதவியும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததுதான் அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த சமரசமற்ற பிடிவாதமான முடிவைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசர அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை பல அடுக்கடுக்கான புகார்களைப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றியும் நயினார் நாகேந்திரனிடம் பாஜக தலைமை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய 2 தரப்பையும் நேருக்கு நேர் அமர வைத்து, உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு மெகா சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த கட்சி மேலிடம் மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளதாம்.

தனது அரசியல் எதிர்காலம் மற்றும் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்து வெளியேறுவாரா அல்லது டெல்லியின் இந்த அவசர சமாதானத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டி புதிய தேசியப் பொறுப்பை ஏற்பாரா? என்பது இன்றைய தினம் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+