சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனியர்கள் அப்செட்.. ‘ஏக்கம் தீரும்’.. இணைய உடன்பிறப்புகளுக்கு குட் நியூஸ் சொன்ன ஐடி விங் செயலாளர்!

Google Oneindia Tamil News

சென்னை : இணையத்தில் பல ஆண்டுகளாக திமுகவுக்காக களமாடும் சீனியர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா.

திமுகவின் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அதில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பலருக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது திமுகவில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருபவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் இல்லாத காலம் முழுவதும் சமூக வலைதளங்களில் தீயாகப் பணியாற்றியவர்களை கைவிட்டு, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உயரிய பொறுப்புகளை அளிப்பதா என திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர்.

பாஜகவை ஃபாலோ செய்யும் திமுக.. திடீர் மாற்றம்.. அதிகாரம் யாருக்கு? பாஜகவை ஃபாலோ செய்யும் திமுக.. திடீர் மாற்றம்.. அதிகாரம் யாருக்கு? "மினிஸ்டரி?" ஸ்டாலின் பிளான் என்ன?

திமுக புதிய நிர்வாகிகள்

திமுக புதிய நிர்வாகிகள்

திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வந்தனர். திமுகவின் பல்வேறு அணிகளுக்கும் தலைவர்கள், செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ தொடர்கிறார். ஐடி விங் இணை செயலாளராக ஆர்.மகேந்திரன், துணை செயலாளராக பத்மபிரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி மாறியவர்களுக்கு பதவி

கட்சி மாறியவர்களுக்கு பதவி

திமுகவில் இருந்து வேறு கட்சிகளுக்குச் சென்று திரும்பி வந்தவர்களுக்கும், வேறு கட்சிகளில் இருந்து சமீபத்தில் திமுகவுக்கு வந்தவர்களுக்கும் மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்த பத்மபிரியாவுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்கள் கொதிப்பு

தொண்டர்கள் கொதிப்பு

திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவி, திமுகவில் மீண்டும் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்டதும் திமுக தொண்டர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் சேர்ந்த கோவை சூலூர் முன்னாள் எம்எல்ஏ பணப்பட்டி தினகரன், திமுகவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 கட்சியை வைத்து பிழைப்பவரிடம்

கட்சியை வைத்து பிழைப்பவரிடம்

இதுபோன்ற நியமனங்களை கடுமையாக விமர்சித்து திமுகவினரே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உழைப்பவரிடம் கட்சிப் பதவி இருக்க வேண்டும், கட்சியை வைத்து பிழைப்பவரிடம் கட்சிப் பதவி போய்விடக்கூடாது என்ற திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வார்த்தைகளை மேற்கொள் காட்டியும் திமுக தலைமையின் நியமனங்களை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

கட்சிக்கு உழைக்காதவர்கள்

கட்சிக்கு உழைக்காதவர்கள்

ஐடி விங் மாநில பொறுப்பில் பத்மபிரியா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஐடி மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜாவிடம் சமூக வலைதளங்களில் இயங்கும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவில் தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கும்போது அவரை மாநில நிர்வாகியாக நியமிக்கும் முடிவு வந்தபோது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவித்திருப்பீர்கள் என நம்புகிறோம், கட்சிக்கு உழைக்காதவர்கள் தன் கண் முன்னே கட்சியில் உயர்ந்த பொறுப்பில் உட்கார்ந்தால் யார் ஏற்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏக்கத்தை தீர்ப்போம் - டி.ஆர்.பி.ராஜா

ஏக்கத்தை தீர்ப்போம் - டி.ஆர்.பி.ராஜா

மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களை பொறுப்பில் நியமித்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், திமுக தொண்டர்கள் மனது குளிரும்படி ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா. "சமூக வலைதளங்களில் 'சீனியர்கள்' பலர் இருக்கிறார்கள். கலைஞரை இவர்கள் சந்தித்தபோது, "இணையத்தில் இயங்குறோம் அய்யா" என்றார்கள். "இயங்குறீங்களா ஏங்குறீங்களா" என்று அப்போதே கேட்டார் கருணாநிதி. இன்னும் அந்த ஏக்கம் சிலருக்கு உள்ளது. அடையாளம் கண்டு உரிய அங்கீகாரம் கொடுப்பது தான் சரி. விரைவில்🌄" எனப் பதிவிட்டுள்ளார் டி.ஆர்.பி.ராஜா.

 பதவி? - உற்சாகம்

பதவி? - உற்சாகம்

தன்னை மென்ஷன் செய்து சமூக வலைதளங்களில் திமுகவுக்காக களமாடும் பலரும் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்திய நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், திமுகவுக்காக சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் சீனியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்பதை உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என சூசகமாக தெரிவித்திருக்கிறார் டி.ஆர்.பி.ராஜா. அவரது இந்தப் பதிவால், இணைய உடன்பிறப்புகள் உற்சாகமடைந்துள்ளனர்.

 புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்!

English summary
State administrators of DMK wings were appointed recently. Among them, many people those who came from alternative parties have been given posts. This has displeased the long-serving members of DMK. In this case, DMK IT Wing Secretary TRP Raja hinted that seniors will be given posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X