பிள்ளையார தெரியும்.. விநாயகர் யாரு? படிக்க உதவாத “சங்பரிவார்” ஆரிய அடிமையாக்குறாங்க -சிவசேனாதிபதி
சென்னை: பிள்ளையாரை பிடித்து வணங்குவதே நமக்கு தெரிந்தது என்றும், இந்த விநாயகர் எப்படி வந்தார் கணபதியம் என்றால் என்ன? எனவும் திமுக பிரமுகர் கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
குறிப்பாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன. அப்போது ஒரு சில இடங்களில் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மற்ற பண்டிகைகளைவிட விநாயகர் சதுர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

இந்து முன்னணி
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, விநாயகர் ஊர்வலம் குறித்த தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

கார்த்திகேய சிவசேனாபதி பதிவு
அதில், "என்றாவது இவர்கள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைபட்டு, இந்து மக்களே ஓடி வாருகள் உங்களை எல்லாம் படிக்க வைக்கிறோம், எப்படி JEE தேர்வு எழுதி நீங்கள் IIT, IIM, Indian institute of science மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பொறியியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கு, என்று உதவி செய்தது உண்டா??

படிக்க அழைத்தார்களா?
TNPSC எப்படிப் படித்து வெற்றி பெற்று அதிகாரிகளாவதைப் பற்றிப் பேசியதுண்டா?? UPSC பயிற்சி வகுப்புகள் நடத்தி இந்துக்களை உயர் அதிகாரி ஆக்குகின்றோம் காவல் துறை அதிகாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களாக என்று கூறியது உண்டா?? இப்படி வாழ்வாதாரத்தைப் பற்றி கல்வியைப் பற்றி, முன்னேற்றத்தைப் பற்றி, சுற்றுச்சூழலைப் பற்றி ஏதாவது விழிப்புணர்வுகள், கருத்தரங்குகள் , முயற்சிகள் எடுக்கிறார்களா என்றால் எதுவும் கிடையாது.

விநாயகர் யா?
பொய் புரட்டு, தனி மனித தாக்குதல், மதத்தை வைத்து அரசியல் செய்வது மட்டுமே முழு நேர வேலையாக வைத்துள்ளார்கள். நமக்கு எல்லாம் தெரிந்தது, சானத்திலே பிள்ளையாரைப் பிடித்து அருகம் புல்லைக் வைத்து, கொழுகட்டை செய்து "குள்ள குள்ளனே, வெள்ளி கொம்பனே" என்று தான் நாம் வணங்குவது உண்டு. இந்த விநாயகர் எப்படி வந்தார் கணபதியம் என்றால் என்ன? ஏன் அவரை வாதாபி கணபதி என்று அழைக்கின்றோம்?

சங்பரிவார் கும்பல்
இதனைப் பற்றி ஒரு சரித்திரத்தை எடுத்துக் கூற வக்கு இல்லாத இந்த சங்பரிவார் கும்பல் தொடர்ந்து நம்மை ஏமாற்றி மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, நம்முடைய வாழ்வாதாரத்தை அழிப்பதையும், ஆரியர்களுக்கு அடிமையாக்குவதையே, முழு நேர வேலையாக வைத்துள்ளார்கள் என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications