தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை.. 'சாவுக்கு காரணம் மனைவிதான்'..உருக்கமான வீடியோ.. மனைவி கைது
சென்னை: சென்னையில் தி.மு.க பிரமுகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் தெருவை சேர்ந்தவர் வித்யா குமார்(34).
Recommended Video
இவர் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். மேலும், தி.மு.க பிரமுகரான இவர் 115-வது வார்டு தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

தொடர்ந்து தகராறு
இவருக்கும் மணலி பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிஷாந்திக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும்போதெல்லாம் பெற்றோர் வந்து சமாதானம் செய்வார்கள். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

போலீசில் புகார்
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் இது தொடர்பாக நிஷாந்தியின் தாய் சம்யுக்தா அண்ணா சாலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து, சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதன்பிறகு நிஷாந்தியும் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வித்யா குமார் இல்லாத நேரத்தில் அவரது பெற்றோரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை
ஏற்கனவே மனைவி தன் மீது புகார் கொடுத்ததால் வித்யாகுமார் விரக்தியில் இருந்து வந்தார். போலீசார் அவரது பெற்றோரை பேசியதால் மேலும் வேதனை அடைந்தார். தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வித்யாகுமார், கடையில் லக்ட்ரிக்கல் பொருட்கள் வைக்கும் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

உருக்கமான வீடியோ
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் சாவுக்கு காரணம் நிஷாந்திதான் என கடிதம் எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. மேலும் வித்யாகுமார் இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றும் வெளியிட்டு இருந்தார், அதில், திருமணம் முடிந்த 9 மாதத்தில் 6 மாதம் வாழ்க்கை நன்றாக போனது. அதன்பிறகு மனைவி நிஷாந்தி, அவரது உறவினர்கள் என்னை கடுமையாக பேசினார்கள். கணவன் என்றும் பாராமல் மனைவி நிஷாந்தி என்னை திட்டி அடிப்பார்.

மனைவி கைது
அவரது அக்கா, மாமா பேச்சை கேட்டுகொண்டு என்னை வாழ விடாமல் கொடுமை செய்தார் மனைவி நிஷாந்தி. எனது சாவுக்கு காரணம் நிஷாந்தி, அவரது அக்கா, மாமா ஆகியோர்தான். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்'' என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த போலீசார், கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக நிஷாந்தியை கைது செய்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications