சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பான தகவலை பரப்பாதீர்கள்... துரைமுருகனுக்கு தமிழிசை பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: கஜாபுயலுக்கு பிரதமர் ஒரு டுவிட்டர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அவதூறு பேசும் திமுகபொருளாளர் தவறான தகவல் தந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

 DMK leader Duraimurugan mislead people, says Tamilisai

தமிழக சட்டசபை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் நேற்று கன்னியாகுமரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கஜா புயலுக்கு நிவாரணம் கொடுப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். கேரளத்தில் வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். அதுபோல் ஜப்பான், இந்தோனேஷியா, அமெரிக்காவில் ஏதேனும் அசம்பாவிதம் என்றால் டுவிட்டரில் அனுதாப செய்தி வெளியிடுகிறார்.
ஆனால் நம் தமிழகத்தில் டெல்டா மாவட்டமே கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு வந்து ஆய்வு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு அனுதாப செய்தியையாவது வெளியிட்டிருக்கலாம். தமிழகம் மீது பிரதமருக்கு எத்தனை அலட்சியம் என்று துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திர ராஜன் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கஜாபுயலுக்கு பிரதமர் ஒரு டுவிட்டர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அவதூறு பேசும் திமுக பொருளாளர் தவறான தகவல் தந்துள்ளார்.மோடி அவர்கள் வடமாநில தேர்தல்பரப்புரைக்கும் நடுவே தமிழகத்திற்கு அவசர உதவிகள் செய்ய ஆணையிட்டு டுவிட்டரில் வருத்தத்தை பதிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu BJP leader Tamilisai has said that the DMK treasurer Duraimurugan has been misinformed as the Prime Minister did not even a tweet to gajacyclone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X