அன்னையை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்: முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். "தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் தனது 93-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 DMK leader MK Stalin condolences over death of Chief Minister Edappadi Palanisamys mother

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    தாய் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - வீடியோ

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+