சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் இது?.. காலில் செருப்பு கூட போடாமல்.. கிட்ட போய் பார்த்தால்.. "செந்தாமரை"!

முக ஸ்டாலினின் மகள் செந்தாமரை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின், மகள் செந்தாமரை திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் சென்றதாக வெளியான போட்டோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது பழைய போட்டோவாம். இப்போது சிலர் தேவையில்லாமல் புதிது போல கிளப்பி விட்டுள்ளனராம்.

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின், மகள் செந்தாமரை திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் சென்றதாக வெளியான போட்டோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.. அதிலும், இந்த 2வது அலை யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு படுபயங்கரமாக இருக்கிறது.. எனவே, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

'ரூட்' க்ளியர்.. உதவும் '15' நாடுகள் .. மீண்டெழுமா இந்தியா? 'ரூட்' க்ளியர்.. உதவும் '15' நாடுகள் .. மீண்டெழுமா இந்தியா?

பௌர்ணமி

பௌர்ணமி

அந்த வகையில், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஏப்ரல் 26-ம் தேதி முதல் பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது... எனவே, பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் சித்ரா பௌர்ணமி தரிசனம், சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள்

பக்தர்கள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியும் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அப்படி இருந்தும் பக்தர்கள் சிலர் அங்கு திரள ஆரம்பித்தனர்.. எனினும், கிரிவல பாதையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, அந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இந்நிலையில், தான் ஒரு போட்டோ இணையத்தில் வெளியானது..

போட்டோ

போட்டோ

அதில், திமுக முன்னாள் அமைச்சர் எவவேலு மகன் எவ கம்பனும், அவருடன் 2 பெண்களும் கிரிவலத்தில் நடந்து செல்வது தெரியவந்தது.. 2 பெண்களும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.. ஆனால், அவருடன் சென்ற மற்றொரு பெண்ணும், கம்பனும் மாஸ்க் அணியவில்லை. இவர்கள் 3 பேருமே காலில் செருப்பு இல்லாமல், நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் 3 பேரும் கிரிவலம் செல்கையில், இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.. அந்த 2 பெண்களில் ஒருவர் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகள் செந்தாமரை என்பது தெரியவந்துள்ளது.

கிரிவலம்

கிரிவலம்

கிரிவலம் சென்ற செந்தாமரை, அண்ணாமலையார் கோயிலில் சித்ர குப்தனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டதாகவும் இதையடுத்து, தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளபோது, இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி தரப்பட்டது என்று உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பினர்.. மற்றொருபக்கம், மேலிடத்தின் உத்தரவுப்படி கிரிவலம் செல்ல அவர்களுக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கப்பட்டது என்று சொன்னார்கள்.. இன்னொரு பக்கம், அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை, அவர்களாகவே இப்படி சென்றார்கள் என்று சொன்னார்கள்..

வதந்தி

வதந்தி

இப்படி ஆளாளுக்கு தகவல்களை பரப்பிய நிலையில், எவ வேலுவின் மகன் கம்பனே இதை பற்றி ஒரு விளக்கம் சொல்லிவிட்டார்.. ''நான் யாருடன் சேர்ந்தும் கிரிவலம் செல்லவில்லை... கிரிவலம் செல்வது போன்று, இப்போது வெளியான படம், 2 மாசத்துக்கு முன்பு எடுத்த பழைய போட்டோ" என்று சொல்லி நிலவிவரும் எல்லா வதந்திகளுக்கும் சேர்த்து ஒரு அழுத்தமான முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

English summary
DMK Leader MK Stalin daughters Thiruvannalamai Girivalam Photo Viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X