விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்?
சென்னை: அதிமுக இளம் தலைவரை கொண்டு வர வேண்டும் என்ற குரல் தீவிரம் அடைந்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை அதிமுகவுக்குள் கொண்டு வர ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது. விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என்று களம் மாறி இருப்பதால், இளம் தலைவரின் அவசியத்தை அதிமுக உணர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் முற்றிலும் புதிய திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை எனத் அனைத்தும் கட்சிகளும் தங்களது 'இளம் முகங்களை' முன்னிறுத்திக் களமிறங்கியுள்ளன.

இந்த அதிரடி அரசியல் சூழலில், அதிமுகவிலும் ஒரு வலுவான இளம் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை அதிகாரப்பூர்வமாகக் கட்சிக்குள் கொண்டு வர ஆலோசனைகள் நடந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய பல முக்கிய நிர்வாகிகள், "மாற்றுக் கட்சிகள் அனைவரும் தங்களது அடுத்த தலைமுறை இளம் தலைவர்களைக் கொண்டு தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளன.
சமூக வலைதளங்களை அவர்கள் மிகத் துல்லியமாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே அதிமுகவிலும் மூத்த தலைவர்களின் வாரிசுகளை, குறிப்பாக இளைஞர்களை உடனடியாகக் கட்சிப் பணிகளில் களமிறக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். இந்த வாரிசுகள் என்ற பட்டியலில் நமது பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களின் மகன் மிதுன் பழனிசாமியும் அடங்குவார்.
அவருக்கும் கட்சியில் உரிய இடம் வழங்கி முன்னிறுத்த வேண்டும்" என்று கூட்டத்தில் கேபி முனுசாமி நேரடியாகவே கோரிக்கை வைத்தார். விஜய், உதயநிதி, அண்ணாமலை போன்ற இளம் தலைவர்கள் இன்று தமிழக இளைஞர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து வரும் சூழலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி போன்ற சீனியர்களே இன்னும் முன்னணியில் உள்ளனர்.
சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், இளைஞர்களைக் கவர மிதுன் பழனிசாமி போன்ற ஒரு புதிய, படித்த இளம் முகம் கட்சிக்குத் தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் வாரிசு மற்றும் சினிமா பின்புலத்துடன் இளைஞர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
ஆனால் மிதுன் பழனிசாமி இதுவரை லைம்லைட்டிற்கே வரவில்லை. அப்படி வந்தாலும் இளைஞர்களை கவர மிதுன் பழனிசாமியால் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிதுன் பழனிசாமி, எடப்பாடியின் நிழலிலேயே வளர்ந்தவர். அவரின் திறமைகள் என்ன என்று கூட அதிமுகவினருக்கு தெரியாது. இதனால் மிதுன் பழனிசாமி வந்தாலும், அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா என்ற விவாதங்களும் தொடங்கி இருக்கின்றன.
-
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications