“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும்! காங்கிரஸ் கூட்டணியில் நாங்க இல்லை": TKS இளங்கோவன்
சென்னை: பாஜகவுக்கு எதிராக மேலும் ஒரு மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையில் பாஜகவுக்கு எதிராக மீண்டும் வலுவான கூட்டணி உருவாகும். காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திமுக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெறவில்லை. எதிர்கால அரசியல் சூழலில் கூட்டணிகளின் நிலைமைகள் மாறக்கூடும். தேசிய அளவில் புதிய அரசியல் சமநிலையும், ஒரு வலுவான அரசியல் கூட்டணியும் இனி உருவாகும் என திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 23 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தி.மு.க இந்த டெல்லி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இல்லைன்னு பெ.சண்முகம் சொல்றது பரவலா பல கட்சிகள், எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கின்றன. ஒருவேளை அதை வைத்து சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை. மறுபடியும் மதச்சார்பற்ற, பாஜக-வுக்கு எதிரான ஒரு கூட்டணி கட்டாயம் உருவாகும், வலிமையான கூட்டணியாக உருவாகும்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியே வந்திருக்கிறார்கள், இரண்டு கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை மற்றவர்கள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள், ஒரு சில கருத்துக்களில் நாங்களும் ஒத்துப்போவோம். எங்களுடைய கொள்கையும் அதுதான், அந்த கூட்டணி கூட்டத்திலே கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்றால் எங்கள் கொள்கைக்கு ஏற்ப, எங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஏற்ப முடிவை ஏற்றால் நாங்கள் அதை வரவேற்போம்.
"திமுக என்பது ஒரு கொள்கை இயக்கம், தேர்தல் வெற்றி தோல்விகள் திமுக-வை அசைத்துக் கூட பார்த்ததில்லை. 75 ஆண்டு காலமாக பல வெற்றிகளையும் சந்தித்திருக்கிறோம், பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம். 1991ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் மட்டுமே வெற்றி பெற்றார். திமுக-வில் மற்ற அனைவரும் தோற்றோம், அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவையே தோற்கடித்தோம்.
எனவே, ஒரு வெற்றியோ ஒரு தோல்வியோ திமுக கழகத்தை பாதிக்காது. இது ஒரு கொள்கைக்காக உருவான இயக்கம், அந்த கொள்கையிலே தொடர்ந்து பயணிப்போம். வெற்றி வரும் பொழுது அந்த கொள்கைகளை செயல்படுத்துவோம், வெற்றி பெறாத நேரத்தில் அந்த கொள்கைகளை ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துப் போராடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள்












Click it and Unblock the Notifications