பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. நச் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி
பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தின் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்..!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன... ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதாகி பல ஆசிரியர்கள் சிறையில் உள்ளபோது, தொடர்ந்து மாணவிகளிடம் அத்துமீறுவதும் அவர்களை டார்ச்சர் செய்வதும் நடந்து வருகிறது.
கோவையில் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.. கரூர் இன்னொரு மாணவியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உறைந்து போயுள்ளனர்.

தற்கொலைகள்
இந்நிலையில், பள்ளி கல்வி துறையில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளியில், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான போட்டியிடும் திமுகவினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்..

புகார்கள்
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது: "பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம்... ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 இடம் இருக்க வேண்டும்.. மேலும், அங்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் போன் நம்பர்களையும் அதில் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.

ஆலோசனைகள்
வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது.. எல்லா இடத்திலும் உளவியல் ரீதியாக ஆலோசனைகள் இன்று தேவைப்படுகிறது... இதற்கென மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

நேரில் ஆய்வு
பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் அவசியம்.. 14417 புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள போகிறேன்.. மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் அரசின் விருப்பம்... பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம்..

புகார்கள்
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் உட்கட்டமைப்பினை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. அதேசமயம், பள்ளியில் சேரும் மாணவர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் விருப்பம், மற்றபடி, தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது அப்படி யாராவது வற்புறுத்தினால் அதை புகாராக தெரிவிக்கலாம்" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications