வார்த்தைகளுக்காக யோசித்ததே இல்லை, ஆனால் இன்று பேச வார்த்தைகள் இல்லை- துரைமுருகன் நெகிழ்ச்சி

துரைமுருகனை ஓபிஎஸ் மனம் திறந்து பாராட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் துரைமுருகனை, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது இடத்தில் வைத்து பார்ப்பதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் .ஸ்டாலின் உருக்கமாகப் பேசியதை கேட்டு கண்கலங்கிவிட்டார் துரைமுருகன்.. இதையடுத்து, சட்டப்பேரவையிலேயே கண்கலங்கி நன்றி சொன்னபோது, வேறு இடமாக இருந்தால் ஸ்டாலினை கட்டி அணைத்திருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் துரைமுருகன் கூறினார்.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடியது.. சட்டப்பேரவையில் இன்றையதினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.. எனவே, இன்றைய தினம் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

முக்கியமாக, துரைமுருகன் சட்டசபையில் இடம் பெற்றிருந்தால், அவையே கலகலப்பாக இருக்கும்... ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து வேறு எதையாவது சொல்லிவிடுவார்.. இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா... துரைமுருகன் பேச்சை ரசித்து கேட்பார்.. அவரது பாடி லேங்குவேஜை அடிக்கடி சொல்லி ஜெயலலிதா கிண்டல் செய்வதும் உண்டு. அதனால் கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் துரைமுருகனின் சட்டசபை பேச்சுக்கு ரசிகர்களாகி போனதும் உண்டு.

பாராட்டு

பாராட்டு

இந்நிலையில், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.. எனவே, இன்றைய தினம் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.. குறிப்பாக அதிமுகவின் ஓபிஎஸ், பாஜகவின் நயினார் நாகேந்திரன், பாமகவின் ஜிகே மணி என அனைவருமே ஒன்றுதிரண்டு வாழ்த்தினார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின் பேசும்போது, "துரைமுருகனை கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.. துரைமுருகனை கருணாநிதி அவர்கள், துரை துரை என்று அழைப்பார்.. புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும்.. எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர்.. மனதில் பட்டதை பேசக்கூடியவர்.. கட்சிக்கும், ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார்.. 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்து கொண்டுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

 வெற்றி - தோல்வி

வெற்றி - தோல்வி

முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசும்போதே துரைமுருகன் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார்.. ஸ்டாலின் பேச, பேச ஒரு கர்சீப்பால் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே இருந்தார்.. எப்போதுமே எளிதில் உணர்ச்சிவசப்படும் துரைமுருகன் ஸ்டாலினின் இந்த தொடர்ச்சியான பாராட்டையும், வாழ்த்தையும் கேட்டு திக்குமுக்காடிப் போய்விட்டார். இதையடுத்து தன்னுடைய நன்றிகளை துரைமுருகன் சபையில் உரித்தாக்கி பேசினார்.

பொருள்

பொருள்

"என் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன்... வார்த்தைக்காகவும், பொருளுக்காகவும் யோசித்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு பேச வார்த்தைகள் இல்லை... எத்தனையோ வெற்றி தோல்விகள் நடைபெற்றிருந்தாலும், என் தலைவர் இன்றைக்கு கொண்டு வந்த தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் பாராட்டியுள்ளனர்... இந்தத் தீர்மானம் வருமென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் சாதாரண கிராமத்தை சேர்ந்தவன், விவசாயி மகன்.. வேறு இடமாக இருந்தால் ஸ்டாலினை கட்டி அணைத்திருப்பேன்" என்றார்.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இப்போது என்றில்லை.. ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்ற போதும்சரி, திருச்சியில் கடந்த மார்ச் மாதம் பேசிய போதும்சரி, இப்படி எத்தனையோ நிகழ்வுகளின்போது, பொதுமேடையிலேயே அளவுக்கு அதிகமான சந்தோஷத்தில் ஸ்டாலினை கட்டிப்பிடித்து கண்கலங்கி இருக்கிறார்.. ஆனால், இன்று சட்டசபை என்பதால், துரைமுருகனால் அப்படி தன் பாசத்தை வெளிக்காட்ட எதுவுமே செய்ய முடியவில்லை.

அரசியல்

அரசியல்

அதாவது, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக கூட்டணிகள் புழுதி வாரி இறைத்து வருகின்றன.. அதேசமயம், கருணாநிதி, ஜெயலலிதா இன்ற இருபிம்பங்கள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு கடந்த கால அதிமுகவின் சில மாஜி அமைச்சர்கள் பேசிய அதிர்ச்சி பேச்சுக்களும், பேட்டிகளும் அமைந்திருந்தன..

 அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

ஆனால், அரசியல் நாகரீகம் என்பது இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கி உள்ளது என்பதும் இன்றைய சட்டசபையின் ஒட்டுமொத்த நிகழ்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.. இந்த கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும், என்பதோடு நம் மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை..!

பாராட்டு

பாராட்டு

கருணாநிதி, ஜெயலலிதா இன்ற இருபிம்பங்கள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு கடந்த கால அதிமுகவின் சில மாஜி அமைச்சர்கள் பேசிய அதிர்ச்சி பேச்சுக்களும், பேட்டிகளும் அமைந்திருந்தன.. ஆனால், இன்று துரைமுருகனை அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டி பேசியதை பார்க்கும்போது, அரசியல் நாகரீகம் இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கி உள்ளது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+