சல்லி சல்லியாகும் கேள்விகள்.. ஜெர்க் ஆகும் பாஜக.. விஜயகாந்த் மாதிரி பதிலடி தரும் அமைச்சர்.. செம..!
பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மா.சு. பதிலடி தந்துள்ளார்
சென்னை: "ரமணா" படத்தில் விஜயகாந்த் சொல்லுவாரே.. அந்த மாதிரி ஒரு பதிலை, திமுக அமைச்சர் சொல்லி உள்ளார்.. இந்த நெத்தியடி பதிலை கேட்டு மறுபடியும் பாஜக அதிர்ந்து போயுள்ளது..
திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, தமிழ்நாடு மிகப்பெரிய சிக்கலில் இருந்தது.. அதாவது ஆம்புலன்ஸிலேயே தொற்று நோயாளிகள் விழுந்து உயிரைவிடும் அளவுக்கு மோசமான நிலைமை இருந்தது.
அதற்கு பிறகுதான், முழு மூச்சாக இறங்கி தொற்றை கட்டுப்படுத்தியாகிவிட்டது.. தமிழ்நாடு இயல்பு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், தமிழக அமைச்சர்களின் அதிரடிகளும் மக்களை கவனிக்க வைத்து வருகின்றன.

சுகாதாரத்துறை
சில தினங்களுக்கு முன்பு, தடுப்பூசி எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்பதை மாநில அரசுகள் சொல்லக்கூடாது என்று மத்திய சுகாதார துறை உத்தரவிட்டிருந்தது.. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பதை நாங்கள், எங்கள் மக்களிடம் சொல்வோம், எதையும் மறைக்க மாட்டோம் என்று கூறி, தடுப்பூசி கையிருப்பு எண்ணிக்கையை புட்டு புட்டு வைத்தார். இதனால் பாஜகவே மிரண்டு போனது.

இணை நோய்கள்
இதற்கு பிறகு மறுபடியும் பாஜக இன்னொரு பிரச்சனையை கிளப்பியது.. '' டாஸ்மாக் கடை திறப்பதில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடும், தற்போது ஒரு நிலைப்பாடும் என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது'' என எல்.முருகன் சாடியிருந்தார்.. அதேபோல, கொரோனாவால் உயிரிழந்தவர்கள், இணை நோய்களால் இறந்து விட்டதாக கூறி அவருக்கு இழப்பீடு வழங்காத சூழ்நிலை நிலவுகிறது... எல்லாருக்குமே நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று 2 விதமான குற்றச்சாட்டுக்களை முருகன் கூறியிருந்தார்.

2 கேள்விகள்
எல்.முருகனின் இந்த 2 கேள்விகளுக்கும், மா.சுப்பிரமணியனே பதிலடி தந்தார்.. "தொற்று குறைந்தபிறகுதான் டாஸ்மாக்குக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... ஏன், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதே? அங்க போய் முருகன் போராட்டம் நடத்த வேண்டியதுதானே? தொற்றினால் இறந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குகிறதா? என்பதை மத்திய அரசிடமே போய் கேட்டு முருகன் தெளிவு பெறட்டும்.. ஒருவேளை உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்கள் மீது முருகனுக்கு அக்கறை இருக்குமானால் மத்திய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை வாங்கி தரட்டும்" என்று நச்சென பதில் சொல்லி இருந்தார்.

பிரச்சனை
இப்போது மறுபடியும் ஒரு பிரச்சனையை கிளப்பினார் எல்.முருகன்.. "எவ்வளவு தடுப்பூசி வந்தது? எவ்வளவு செலுத்தப்பட்டுள்ளது? என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.. முருகனின் இந்த கேள்விக்கும் மா.சுப்பிரமணியனே பதிலடி தந்துள்ளார்.

வெள்ளை அறிக்கை
"இதுவரை தடுப்பூசிகள் பெறப்பட்ட எண்ணிக்கை 1,44,39,940... இதுவரை செலுத்தப்பட்ட எண்ணிக்கை 1,41,50,249. இப்போது வரை 2,07,375 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது... இதில் 29,92,000 தடுப்பூசிகளை 99 கோடியே 84 லட்சம் தொகை செலுத்தி மக்கள் நல்வாழ்வுத்துறை தனியாரிடமிருந்து வாங்கியுள்ளது.. இது தான் முருகன் கேட்ட தடுப்பூசி நிலவரம் பற்றிய வெள்ளை அறிக்கை...!

பதிலடி
வெள்ளை அறிக்கை கேட்கும் அந்த தலைவர், "ஒன்றிய" அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார். பாஜகவை பார்த்து ஒன்றிய என்று அழுத்தம் திருத்தமாக, புள்ளிவிவரத்துடன் மா.சு.வின் பதிலடியால் பாஜக திகைத்து போயுள்ளது.. பாஜக எந்த பந்து போட்டாலும், அதை வாங்கி, திருப்பி அடித்து கொண்டிருக்கிறது திமுக..!
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications