புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும்.. திமுக எம்.எல்.ஏ கோரிக்கை.. 39வது மாவட்டமாகிறதா மாதவரம்?
சென்னை : இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், மாதவரத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாவத்தில் பங்கேற்றுப் பேசினர்.

தனி மாவட்டம் வேண்டும்
வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரம் முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் மினி டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் எனவும் சுதர்சனம் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்தார்.

மாதவரத்திற்கு கோரிக்கை
மேலும், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சுதர்சனம், இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து, மாதவரம் தொகுதியில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும் எனவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் மாதவரம் முன்னர் நகராட்சியாக இருந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும்போது, மாதவரம் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் உட்பட 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மாதவரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications