பாலில் விழுந்த பழம்! தேமுதிகவை விடுங்க..திமுகதான் ரொம்ப ஹேப்பியா இருக்கு! ப்ளாஷ்பேக் சொல்லும் உண்மை!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பல மாதங்களாக நீடித்திருந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியால் தேமுதிகவை விட திமுகவினர் தான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 2011, 2016 தேர்தல்களில் திமுக தோல்வி அடைய தேமுதிக ஒரு காரணமாக இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளில் தான் திமுக தோல்வியை சந்தித்தது. அந்த தொகுதிகளில் தேமுதிக - அமமுக கூட்டணி ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தது. தற்போது தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொல்கின்றனர் திமுகவினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் கள் வேகமெடுத்துள்ள சூழலில், தேமுதிக எந்த அணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக அணியில் தேமுதிக இணைய வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரே நிகழ்வில் பங்கேற்றது கூறப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்
அந்நிகழ்வுக்குப் பின்னர் தேமுதிக தேசிய ஜனநாயக அணியில் இணையும் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை மாற்றும் வகையில், பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திமுக தேமுதிக கூட்டணி
சந்திப்புக்கு பின் பிரேமலதா விஜயகாந்த் அளித்த தகவலின்படி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவது போன்ற விவரங்கள் குறித்து இரு கட்சிகளும் இணைந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த கூட்டணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேமுதிக
ஏனெனில், தேமுதிக தொடங்கியதிலிருந்து முதன்முறையாக திமுகவுடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த காலத்தில் உருவாகாத இந்த கூட்டணி, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி உறுதியானதையடுத்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி அரசியல்
இந்த கூட்டணியால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக சட்டமன்றத்திற்கு செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் வரும் மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுகவுக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் கிடைக்கும் நிலையில், அதில் ஒன்றை தேமுதிகவுக்கு தரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தேமுதிக கால் வைக்கிறது. கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதன்முறையாக டெல்லி செல்லும் சூழல் உருவாகி இருப்பதால் தேமுதிகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஜயகாந்த்
அதே நேரத்தில் தேமுதிக விட திமுகவினர் இந்த கூட்டணியால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மண்டபம் இடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் தனி கட்சி ஆரம்பித்தார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்ததில் இருந்து கடைசி தேர்தல் வரை திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவுடன் மோதல் போக்கு இருந்த போதும் திமுகவை எதிர்வை போலவே பாவித்தார் விஜயகாந்த். 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுக தோல்வியை சந்திக்க தேமுதிக காரணமாக இருந்தது. 2011ல் அதிமுகவுடன், 2016 மக்கள் நல கூட்டணியுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். இதனால் திமுக தோல்வியை சந்தித்தது.
அதிமுக- பாஜக
ஒருவேளை 2016ல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முடிந்திருக்காது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சில தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. அந்த தொகுதிகளில் அதிமுக- பாஜக வென்றது. அதே நேரத்தில் தேமுதிக - அமமுக கூட்டணி வேட்பாளர்கள் 3, 4ஆம் இடங்களை பெற்றனர். அவர்கள் சில ஆயிரம் வாக்குகளை பெற்ற நிலையில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்க நேரிட்டது. தற்போது தேமுதிக கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை திமுக பெரும் என்கின்றனர் திமுகவினர்.
-
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications