'பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் பாதிப்பு'.. மணிப்பூர் சம்பவத்தை கேட்டு கொதித்து போன கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி வேதனை தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக வன்முறை அதிக அளவு நடந்தது.குறிப்பாக கடந்த மே மாதம் உச்சகட்ட வன்முறைகள் நடந்தது இந்த வன்முறைக்கு இரு பிரிவினர் இடையே நடந்த மோதல்கள் தான் காரணம்.

DMK MP Kanimozhi tweet about manipur insident, country suffered due to divisive politics of BJP

மணிப்பூரில் இரண்டு வகையான இன குழுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஒன்று மைத்தேயி/மெய்டெய் எனப்படும் சமூகத்தினர். இரண்டாவது , மாநிலத்தின் பூர்வகுடிகளான குக்கி+நாகா எனும் பழங்குடியினர். இதில் மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினரின் எண்ணிக்கை 53 சதவிகிதம் ஆகும். இவர்களுக்கு அங்கு ஆளும் பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியில் பழங்குடி சமூகத்தினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகா மக்கள் காடுகளிலும், காடுகள் சார்ந்த சமவெளி பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. அதேபோல வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் 31 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. தற்போது பழங்குடியின அந்தஸ்து மைத்தேயி/மெய்டெய் இன மக்களுக்கு வழங்கப்பட்டால் தங்களது உரிமை பாதிக்கப்படும் என்று அச்சம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆவார்.

ஆனால் மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினர் இந்துக்கள் (OBC) ஆவர். இந்நிலையில் மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்க்க அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக முயன்றது. இந்த விவாகரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் பாஜக அரசு முடிவெடுக்கலாம் என்று கூறியது. அரசு மற்றும் நீதிமன்றததில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் ன குக்கி+நாகா எனும் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தை தொடங்கினர். உடனே மைத்தேயி/மெய்டெய் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் மொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரிந்தது. மணிப்பூர் மாநிலத்தில் 100க்கணக்கான மக்கள் இறந்து போயினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. இரு சமுகத்தினரிடையே கடுமையான மோதல் காரணமாக ராணுவம் தலையிட்டது. வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. இன்னமும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது.

இந்த சூழலில் மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியானது.100க்கணக்கான ஆண்கள் இரண்டு பெண்களை நாசம் செய்த வீடியோவை பார்த்து நாடே கொதித்து போய் இருக்கிறது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவாகரத்தை கண்டு கொதித்து போனார். இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வலிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறனே். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்வத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது" என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "மணிப்பூரில் இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது கொடூரமான செயல். இத்ந சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

DMK MP Kanimozhi tweet about manipur insident, country suffered due to divisive politics of BJP

மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அங்கு அமைதிக்கான நடவடிக்கை எடுப்பதிலோ, அங்கு நிலைமையை சீராக்க சரியான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த விவாகரத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான குறைப்பாடு அப்பட்டமாக தெரிகிறது. மணிப்பூரில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பாக எடுக்க வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+