"மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க.. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்”.. பி.வில்சன் பரபர பேட்டி!
சென்னை: துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.பி வில்சன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், லஷ்மி நாராயணன் அமர்வு இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

துணைவேந்தர் நியமன அதிகார மசோதா
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றி வழங்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதனால் இந்த 10 மசோதாக்களும் சட்டங்களாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.
எதிர்த்து மனு
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் பெஞ்ச் விசாரித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்; ஆகையால் இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அவசரமாக ஏன்?
மேலும் இந்த வழக்கின் மனுதாரரர் பாஜகவைச் சேர்ந்தவர்; அரசியல் உள்நோக்கத்துடன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்; இவரது ரிட் மனுவை இவ்வளவு அவசரமாக ஏன் விசாரிக்க வேண்டும்? எனவும் மூத்த வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பினார். மேலும் உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்பான மனு மீது உத்தரவு பிறப்பித்த பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் பி. வில்சன் தமது வாதத்தில் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர் வெங்கடாஜலபதி அரசியல் உள்நோக்கத்துடன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யவும் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.
இடைக்கால தடை
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.
மேல்முறையீடு செய்ய முடிவு
இந்நிலையில், துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.
துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அரசுக்கு போதுமான வாய்ப்பு அளிக்காமல் விசாரணை நடத்தியது முறையற்றது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு விசாரிக்கலாம், அதுவரை கால அவகாசம் தர வேண்டும் எனக் கோரினோம்.
மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள்
நாங்கள் கோரிக்கை விடுத்தபோது மைக்கை அணைத்துவிட்டார்கள். நீதிபதிகள் என்ன சொன்னார்கள் என்பதைக் கூட கேட்க முடியாத படி மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உத்தரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
அவசர கதியில் உத்தரவை பெற்றுள்ளனர். மனுதாரரான பாஜக நிர்வாகி, எந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் வழங்காத நிலையில், எதன் அடிப்படையில் நாங்கள் வாதிட முடியும்?" என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications