நாடாளுமன்றத்தில் வெடிக்கக் காத்திருக்கும் முக்கிய பிரச்சனை.. திமுக எம்.பிக்களை உடனே அழைத்த ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 09-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பொருள் : நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் சூழலில், திமுக எம்.பிக்கள் செயல்பட வேண்டியது பற்றி நாளை நடைபெற உள்ள திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்










Click it and Unblock the Notifications