திமுக விருப்பமனு காலம் இன்றோடு முடிவடைந்தது

அண்ணா அறிவாலயத்தில் திமுக விருப்ப மனுவை தாக்கல் இன்று நிறைவு பெற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது.

எந்நேரமும் எம்பி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணிகளை முடித்து தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

DMK nomination last date today

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு போக மீதம் உள்ள 20 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த மாதம் 25ம் தேதி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கான அறிவிப்பினை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். அன்றைய தினத்திலிருந்து விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்தன. இடையில் இதற்கான கால அவகாசமும் இன்றுவரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீதான நேர்காணல், நாளையும் நாளை மறுநாளும் கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+