பெரிய டாஸ்க்.. தமிழகத்தில் கோட்டையை பிடிக்கும் கட்சிக்கு காத்திருக்கும் சவால்.. முதல்ல இதை பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வென்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அந்த கட்சி கடுமையாக கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் கொரோனா பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தினமும் 80 ஆயிரம் + கேஸ்கள் பரவி வந்த நிலையில், தற்போது தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 4 நாட்களாக உலகிலேயே இந்தியாவில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,679,958 பேர் குணமாகி உள்ளனர் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 477 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 12,587,920 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம்
கொரோனா பரவல் தமிழகத்திலும் மோசமாகி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. இரண்டு வாரம் முன்பு வரை தமிழகத்தில் தினசரி கேஸ்கள் 1000கும் குறைவாக இருந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் 1000ஐ தாண்டியது.

பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் கூடுவதால் தொடர்ந்து கொரோனா கேஸ்களும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தினமும் 3000+ கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,99,807 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,65,071 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12778 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

சவால்
தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்கும் கட்சிக்கு இது பெரிய சவாலான விஷயமாக இருக்க போகிறது. திமுகவோ, அதிமுகவோ தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதும், எதிர்கொள்வதும் முதல் டாஸ்க்காக இருக்கும். கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதே தமிழக அரசின் டார்கெட்டாக இருக்க போகிறது.

பிரச்சனைகள்
மற்ற பிரச்சனைகளை தாண்டி கொரோனாவை எதிர்கொண்டு முறியடிப்பதே கட்சிகளின் முதல் கட்ட சவாலாக தேர்தலுக்கு பின் இருக்க போகிறது . அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதை தனது முதல் கட்ட பணியாக அறிவித்தார். தற்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி மக்களை தொகைக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது, ஜூன் இறுதிக்குள் எல்லோருக்கும் அமெரிக்காவில் வேக்சின் போடப்பட்டுவிடும்.

வேக்சின்
அதேபோல் தமிழகத்தில் தேர்தலுக்கு பின் எந்த கட்சி பதவி ஏற்றாலும், அவர்களும் கண்டிப்பாக கொரோனா மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அதிகரித்து வரும் தினசரி கேஸ்கள் குறைப்பது, கொரோனா வேக்சினை மக்களுக்கு கொண்டு செல்வது, பொருளாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பது என்று புதிய தமிழக அரசுக்கு நிறைய சவாலான விஷயங்கள் கண் முன் உள்ளன.

தமிழக அரசு
தமிழகத்தில் பதவி ஏற்க போகும் அரசுக்கு உள்ள டாஸ்குகள்
கொரோனா வேக்சின் அளிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.
இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
கொரோனா பரவலை குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மக்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் மறந்துவிட்டனர். இதற்காக ஸ்மார்ட் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும் .

புதிய ஆட்சி
ஆட்சி கட்டிலுக்கு வரும் கட்சிக்கு முன் இருக்கும் மிகப்பெரிய டாஸ்க் இதுதான். எடப்பாடி பழனிசாமியோ, ஸ்டாலினோ.. அல்லது வேறு யாரோ.. தமிழக கடன் தொல்லை தொடங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுவது வரை எல்லாமே இரண்டாம் பட்சம்தான். கொரோனாதான் இவர்களுக்கு முதல் சிக்கல். தமிழகத்தில் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆட தொடங்கி உள்ள நிலையில் ஆட்சி கட்டிலில் அமர போகும் கட்சி கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.