திமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 56 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் 6 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தனர்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications