இப்போ நாய் கூட பிஏ பட்டம் வாங்குது..டாக்டர் பட்டம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை! ஆர்.எஸ்.பாரதி பகீர்
சென்னை: திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தமிழக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது டாக்டர் பட்டம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவர் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்தவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்திய நாடாளுமன்றத்திலும் நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா மற்றும் தமிழக எம்பிக்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி," கம்யூனில் ஜி.ஓ. மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்
இதை நாம் நினைக்க வேண்டும். நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பெருமையால் கோத்திர பெருமையால் வந்ததா? நான் படிக்கும்போது பிஏ படித்தாலே வீட்டில் போர்டு வைத்துக் கொள்வார்கள். இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப் படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப் படிப்புகள் டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. குலம் கோத்திர பெருமையால் டாக்டராகவில்லை. சாதிவாரி இட ஒதுக்கிட்டதால் எங்களின் பலர் மருத்துவர்கள் ஆகினர். எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளது."என பேசினர்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,"மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
நீட் தேர்வு.. எக்ஸாம் டைம் எக்ஸ்ட்ரா கொடுத்த NTA! இந்த முறையாவது தேர்வு சரியாக நடக்குமா?












Click it and Unblock the Notifications