Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிர்ப்பும் புத்துணர்வும் பெருகுகிறது! திராவிட இயக்கத்தின் சொந்த மாதம் செப்டம்பர்-ஸ்டாலின் பூரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் பிறந்தாலே சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;

 செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும். ஆம்! இது நமக்கான மாதம்; திராவிடர்க்கான மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம்தான். அவருடைய இலட்சியப் படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான்.

புதுமைக் கருத்துகள்

புதுமைக் கருத்துகள்

தந்தை பெரியாரின் புதுமைக் கருத்துகளையும், புரட்சிகரமான கொள்கைகளையும், அரசியல் களத்தில் அனைவர்க்கும் அறிமுகம் செய்து, அறிவொளி ஏற்றி, அமைதி வழியில் வென்றெடுக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான். அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.

முப்பெரும் விழா

முப்பெரும் விழா

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து, கழகத்தின் கொள்கை, பார்மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி, நமக்கெல்லாம் நல்வழி காட்டியிருக்கிறார். கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம் உள்ளிட்ட இன்னும் பல வழிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் நேரடியான எழுச்சிப் பங்கேற்புடன் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள் எத்தனையெத்தனை! அத்தனையும் அவரைப் போலவே, நம் நெஞ்சை விட்டு சற்றும் நீங்காமல் பசுமையாகவே இருக்கின்றன.

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இயங்கி வந்த கழக அலுவலகத்தை, அரசியல் காழ்ப்புணர்வால் - தீராப் பகையால் அன்றைய ஆட்சியாளர்கள் ஆணவத்தோடு அகற்றியபோது, அதே அண்ணா சாலையில் கழகத்திற்கெனத் தனி அலுவலகத்தை அமைத்திடுவேன் எனச் சூளுரைத்த நம் உயிர்நிகர் தலைவர் அவர்கள், ஒவ்வொரு உடன்பிறப்பின் இரத்தமும் வியர்வையும் கலந்த 'அண்ணா அறிவாலயம்' எனும் கம்பீரமான கழக அலுவலகத்தை அமைத்துக் காட்டினார். அறிவாலயம் திறக்கப்பட்டதும் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள்தான்.

வெண்சீருடை அணிவகுப்பு

வெண்சீருடை அணிவகுப்பு

முப்பெரும் விழாவின் ஒரு விழாவாக, உடன்பிறப்புகளின் உணர்வுப் பிரவாக விழாவாக அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோதுதான், கழகத்தின் இளைஞரணி சார்பில் வெண்சீருடையில் அணிவகுப்பை நடத்திக் காட்டினோம். அதுவரை ஊர்வலம் என அழைக்கப்பட்டு வந்த கழக அணிவகுப்புகள், அன்று முதல் பேரணி என்ற நிரந்தரப் பெருமையைப் பெற்ற வரலாறும் முப்பெரும் விழாவுக்கு உண்டு. இளைஞரணியின் செயலாளராக இருந்த என்னுடைய பங்கும் அதில் உண்டு என்பதில் உடன்பிறப்பாக - உங்களில் ஒருவனாக மன மகிழ்ச்சி கொள்கிறேன்.

லட்சோப லட்சம்

லட்சோப லட்சம்

சமூகநீதியை இலட்சியமாகக் கொண்டு, ஜனநாயக வழியில் நித்தமும் பயணித்திடும் திராவிட முன்னேற்றக் கழகம், கடந்து வந்த நெருப்பாறுகள், தாண்டிவந்த கொந்தளிப்பான கடல்கள், நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட புயல்கள், நிறைய இருக்கின்றன. தங்கள் இன்னுயிர் தந்தும், வாழ்க்கையை அப்படியே ஒப்படைத்தும் கழகத்தை வளர்த்த ஆயிரமாயிரம், லட்சோப இலட்சம், அரிமாக்களை ஒத்த தோழர்களைக் கொண்ட தூய இயக்கம் இது.

விருது விவரம்

விருது விவரம்

கழகம் காத்திட, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்தம் திருப்பெயர்களில் விருதுகள் வழங்கிடும் நிகழ்வை நம் உயிர்நிகர் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, ஆண்டுதோறும் தொடர்ந்து அவற்றை வழங்கி வந்தார். அதன் தொடர்ச்சியாக, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும், நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மருதிருவர்

மருதிருவர்

விருதுநகரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை, 'மருதிருவர்' போல, கழகத்தை அந்த மண்ணில் வளர்த்தெடுக்கும் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும், இரவு-பகல் பாராது மேற்கொண்டு வருகின்றனர். விழா ஏற்பாட்டுப் பணிகளை உங்களில் ஒருவனான நானும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். விழா பிரம்மாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை.

பொங்குமாங்கடல்

பொங்குமாங்கடல்

ஆயிரமாயிரமாய், இலட்சோப லட்சமாய் திரண்டுவரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+