பாஜகவுக்கு “ரிஸ்க்”தானோ.. 2024 தேர்தலில் ‘இந்தியா’ வெல்லும்! திமுக ராஜீவ் காந்தியின் பக்கா கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வென்று மோடியின் பிம்பம் உடையும் என திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி மாநில வாரியாக விளக்கி பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "இந்தியா வென்று மோடியின் பிம்பம் உடையும் நேரம் இது!!

DMK Rajiv Gandhi gave detailed analysis that how INDIA won in Lok Sabha Election 2024

உத்திரபிரதேசம்: 62
பீகார்: 17
ராஜஸ்தான்: 24
மகாராஷ்ரம்: 23
குஜராத்: 26
கர்நாடகம்: 25
மேற்கு வங்கம்: 18
மத்திய பிரதேசம்: 28
ஜார்கண்ட்: 11

கடந்த 2019 தேர்தலில் பாஜக பெற்ற 303 மொத்த தொகுதியில் 234 தொகுதிகள் இந்த 9 மாநிலங்களில் இருந்து பெற்று உள்ளது. உத்திரபிரதேசத்தில் இப்போது அகிலேஷ் யாதவ் அவர்களின் சமாஷ்வாடியும் காங்கிரஸ் கூட்டணியும் அப்போது இல்லை. இப்போது உள்ள சட்டமன்ற பலமும் அப்போது இல்லை.

இந்த முறை கடந்த முறை வென்ற மொத்த தொகுதி என்கிற வெற்றியை மோடியால் உறுதியாக பெற முடியாது. இப்போது உள்ள சட்டமன்ற பலமே இந்தியா கூட்டணிக்கு தனித்து நின்று சட்டமன்ற தேர்தலினை அனுகிய போதும் 38 பாராளுமன்றத்தினை தருகிறது. பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் அப்போது பாஜக கூட்டணியில் இருந்ததால் 17 இடங்களை பாஜக வெல்ல முடிந்தது.

இப்போது பீகார் முதல்வர் நிதீஷ் இந்தியா கூட்டணியில் லாலு அவர்களுடன் உள்ளார் பீகாரில் ஆளும் கட்சியாகவும் உள்ளது இந்தியா கூட்டணி. ராஜஸ்தானில் மீண்டும் பலம் பெற்று ஆளும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. மகாராஷ்டிரத்தில் தனித்து நின்ற காங்கிரஸ் + உத்ததவ் தாக்கரையின் சிவசேனா + சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கடந்த தேர்தலில் தனித்து நின்றதால் வெல்ல முடியவில்லை.

இப்போது பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது இந்திய கூட்டணியில் உள்ளது. குஜராத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பிரித்த 13% வாக்கு தான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பெரும் காரணம். இந்த பாராளுமன்றத்தில் காங்கிரஸ் + ஆம் ஆத்மியின் இந்தியா கூட்டணி பெரிய தாக்காத்தினை ஏற்படுத்தி பெரும்பாண்மை இடங்களை வெல்ல வாய்ப்பு உண்டு.

கர்நாடகாவில் 40% கமிசன் லஞ்சத்தால் பாஜக ஆட்சியினை இழந்து உள்ளது. தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து பெரும்பான்மை பலத்தில் உள்ளது. கடந்த முறை போல் 25 தொகுதிகளை பாஜக இந்த முறை வெல்ல முடியாது. மேற்கு வங்கத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியால் கடந்த முறை 18 தொகுதிகளை வென்ற பாஜகவால் இந்த முறை மம்தா + கம்யூனிஸ்டு + காங்கிரஸ் என்கிற மோடி எதிர்ப்பு கொள்கை கூட்டணி என்கிற இந்தியா கூட்டணியின் பொது வேட்பாளர்களை வெல்லவே முடியாது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதும் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கி கொல்லைப்புறத்தில் தற்போது ஆட்சி நடத்துகிறது பாஜக. தற்போது உருவாகி உள்ள இந்தியா கூட்டணியின் நேர்மறை பலமும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பலமும் இந்த முறை பாஜகவால் 28 தொகுதிகளை உறுதியாக வெல்ல முடியாது.

ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் கேமந்த் சோரன் அவர்களின் ஜார்கண்ட் முக்தி மோர்சா இந்த முறை இந்தியா கூட்டணியில் இணைந்து உள்ளதால் காங்கிரஸ் + ஜார்கண்ட் முக்கிமோர்சா ஆதரவும் எல்லா தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெல்ல வைக்கும்.

இது தவிர தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா இந்த மாநிலங்களில் உள்ள 102 தொகுதியில் பாஜக 5 தொகுதிகளை கூட வெல்ல சாத்தியக்கூறு இல்லை. கடந்த முறை போல் வட கிழக்கு மாநிலங்களில் இந்த முறை பாஜகவால் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. காஷ்மீரில் பாஜகவால் ஓரிரு தொகுதிகளை தான் வெல்ல வாய்ப்பு உள்ளது.

DMK Rajiv Gandhi gave detailed analysis that how INDIA won in Lok Sabha Election 2024

டெல்லியில் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி + காங்கிரஸ் இந்தியா கூட்டணியால் கடந்த முறை முழுமையாக வென்ற 7 தொகுதிகளை இந்த முறை பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை. பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் சேர்வதும் கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த அகாலி தளம் இந்த முறை பாஜக கூட்டணியில் இல்லாததும் இந்த முறை பாஜகவால் பஞ்சாப்பினை யோசித்து கூட பார்க்க முடியாது.

கடந்த முறை பாஜக ஒரிஸாவில் வென்ற 8 தொகுதியும், ஹரியானாவில் வென்ற 10 தொகுதியும், அசாமில் வென்ற 07 தொகுதிகளையும்
இந்த மொத்த உள்ள 25 தொகுதிகளை தக்க வைக்க மோடி ரொம்பவே இந்த முறை மெனக்கட வேண்டும்!
இந்தியா என்கிற கூட்டணி!
மோடி பிரதமராக வரக்கூடாது என்கிற சிந்தனை!!
இந்திய நாட்டின் பன்முக தண்மையின் அடையாளம்!!!
இந்த முறை நரேந்திர தாமோதரதாஸ் மோடியை இந்திய பிரதமர் நாட்காலியில் இருந்து இறக்கி விடும்!!
இந்தியா உறுதியாய் வெல்லும்!!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+