சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அப்படி என்ன கேட்டுட்டேன்? லெட்டரை தப்பாக அனுப்பிய சு.சாமி? விட்டு விளாசும் திமுக புள்ளி! பரபர!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுதிய கடிதத்திற்கு திமுகவினர் சரமாரி பதிலடி கொடுத்து வருகின்றனர் .

திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும், அவர்களின் சின்னத்தை பறிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல் நாள் திமுகவிற்கு எதிராக டெல்லி தேர்தல் அலுவலர் மிசோவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

திமுகவை சாய்க்க.. டெல்லிக்கே திமுகவை சாய்க்க.. டெல்லிக்கே "லெட்டர்" போட்ட சு.சாமி! முடிஞ்சா தொட்டு பாருங்க.. சீறிய திமுக எம்பி!

அதில், திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறிவிட்டார். அதனால் கட்சி அங்கீகாரத்தை நீக்க வேண்டும்.

 பிராமணர்கள்

பிராமணர்கள்

பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும். அவர்களை இன ஒழிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திராவிட இயக்கத்தை தொடங்கிய பெரியாரின் கொள்கை அது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பிராமணர்கள் தமிழ்நாட்டில் தங்கள் வாக்கு உரிமையை செலுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை பயன்படுத்தி திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றிபெற திட்டமிடுகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.திமுகவின் அங்கீகாரத்தை பறித்து, சின்னத்தை முடக்க வேண்டும் என்று சு. சாமி குறிப்பிட்டார்.

சுப்பிரமணியன் சாமி

சுப்பிரமணியன் சாமி

சுப்பிரமணியன் சாமியின் இந்த கடிதத்தை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. திமுகவை பாஜகவால் களத்தில் எதிர்க்க முடியவில்லை. கொள்கை ரீதியாக திமுகவை பாஜகவால் எதிர்க்க முடியவில்லை. அதனால் ஏதாவது காரணம் சொல்லி திமுகவின் அங்கீகாரத்தை பறிக்க பாஜகவின் சுப்பிரமணியன் சாமி முயன்று வருகிறார். இதெல்லாம் நடக்காது என்று திமுகவினர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி

இந்த நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி சுப்பிரமணியன் சாமியை விமர்சனம் செய்துள்ளார். அதில், நான் என்ன தப்பா கேட்டேன்!! இந்திய தேர்தல் ஆணையருக்கு அனுப்ப வேண்டிய புகார் கடிதத்தினை டெல்லி மாநில தேர்தல் துணை ஆணையருக்கு தவறுதலா அனுப்பி இருக்கீங்க சரியான முகவரிக்கு அனுப்புங்க என்று தானே சரியான முகவரி கொடுத்தேன்!!, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 உரிமம் ரத்து

உரிமம் ரத்து

பொதுவாக கட்சியின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற புகார்களுக்கு தலைமை தேர்தல் ஆணையருக்குதான் கடிதம் எழுதுவார்கள். அல்லது அந்த கட்சியின் மாநிலத்தில் உள்ள தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதுவார்கள். ஆனால் சுப்பிரமணியன் சாமி, டெல்லி தேர்தல் அலுவலர் மிசோவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக ராஜிவ் காந்தியும் இதை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

English summary
DMK Rajiv Gandhi gives hard-hitting response to BJP Mr. Subramanian Swamy for his letter to EC. திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுதிய கடிதத்திற்கு திமுகவினர் சரமாரி பதிலடி கொடுத்து வருகின்றனர் .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X