திமுக மாநிலங்களவை வேட்பாளர்களின் சொத்து மதிப்பு.. வழக்கறிஞர் வில்சனுக்கு எவ்வளவு?
சென்னை: மாநிலங்களை தேர்தலில் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூன்று பேரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இவர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சொத்து மதிப்பு விவரங்கள்
அதேபோல் அதிமுக தரப்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது. வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
வில்சன் சொத்து மதிப்பு
அதில் திமுக வேட்பாளரான வழக்கறிஞர் பி.வில்சன் கையிருப்பில் ரூ.15 லட்சமும், மனைவி ஆர்.வான்மதியிடம் ரூ.1.40 லட்சமும் உள்ளது. இவரிடம் பென்ஸ், டொயோட்டோ, மகேந்திரா ஆகிய கார்கள் உள்ளன. அசையும் சொத்துகளின் சொத்து மதிப்பு ரூ.12.58 கோடியாகும். மனைவியிடம் ரூ.3.27 கோடி சொத்து உள்ளது. அதேபோல் வில்சன் பெயரில் விளைநிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.28.08 கோடியாகும்.
கவிஞர் சல்மா சொத்து மதிப்பு
மனைவி பெயரிலான சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.11.72 கோடியாகும். இவருக்கு ஒட்டுமொத்த கடனாக இருவருக்கும் சேர்த்து ரூ.1.15 கோடியாகும். அதேபோல் கவிஞர் சல்மாவின் கையிருப்பில் ரூ.1 லட்சம், கணவர் அப்துல் மாலிக்கிடம் ரூ.50 ஆயிரம் இருக்கிறது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.90.09 லட்சம், கணவர் பெயரிலான சொத்து மதிப்பு ரூ.55.42 லட்சம் உள்ளது.
எஸ்.ஆர்.சிவலிங்கம் சொத்து விவரம்
அவரின் பெயரில் உள்ள வேளாண் நில சந்தை மதிப்பு ரூ.1.15 கோடியாகும். இதர அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடியாகும். அதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்தில் கையிருப்பில் ரூ.50 ஆயிரமும், மனைவி நவரத்தினத்திடம் ரூ.50 ஆயிரமும் உள்ளது. அசையும் சொத்து மதிப்பு ரூ.76.04 லட்சம்.
கமல்ஹாசனின் கடன்
மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.1.30 கோடியாகும். நிலங்கள் உட்பட அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.5861 லட்சம். அதேபோல் மனைவி பெயரிலான அசையா சொத்து மதிப்பு ரூ.1.64 கோடியாகும். மொத்தமாக ரூ.64.30 லட்சம் கடன் உள்ளது. அதேபோல் கமல்ஹாசனுக்கு கடனாக ரூ.49.67 கோடி இருக்கிறது. மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் என 4 கார்கள் உள்ளன.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications