தாடி வைத்த முக ஸ்டாலின்.. பார்த்திருக்கிறீர்களா.. டிஆர்பி ராஜா ட்வீட்டில் புதைந்திருந்த ஆச்சரியம்!

மிசாவில் முக ஸ்டாலின் கைதான நாள் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஆர்பி ராஜாவின் ட்விட்டருக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்து கொண்டிருக்கிறது.. ஆம்.. தாடி வைத்த முக ஸ்டாலினை நாம் பார்க்கலாம்.. எல்லோரும் பட்ஜெட் சமாச்சாரத்தையே உற்று நோக்கி கொண்டிருக்க.. திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா மட்டும் தன் கட்சி தலைவர் மீதான தன் விசுவாசத்தை ட்விட்டரில் சரியான தருணத்தில்.. சரியான சம்பவத்தை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தி உள்ளார்!

சில மாதங்களுக்கு முன்பு உண்மையிலேயே மிசாவில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்று சிலர் சர்ச்சை கிளப்பினர்.. இது விவாத பொருளாகவும் உருவானது.. இந்த விவகாரத்தை பாஜகவும் அதிமுக அமைச்சர்கள் சிலரும் கையில் எடுத்து, மிசா கைதுக்கான ஆதாரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்து விடுத்தனர்.

இதுகுறித்து திமுக தரப்பிலும், ஸ்டாலினும் பதிலளித்தாலும் திரும்ப திரும்ப இது சோஷியல் மீடியாவை விவாத பொருளாக்கப்பட்டு ஒருவித பரபரப்பிலேயே வைத்திருந்தனர். "மு.க. ஸ்டாலின் ஒரு மிசா கைதி அல்ல, ஆதாரங்கள் எதுவும் முறையா இல்லையே.. நெஞ்சுக்கு நீதி, ஸ்டாலினின் பயணக்குறிப்புகள் நூல்களில்தான் ஆதாரம் இருக்கிறது, அதனால் ஆதாரத்தை காட்டுங்கள்" என்று ஒரு தரப்பும், சோஷியல் மீடியாவில் இதனை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிடுவது என இன்னொரு தரப்பும்.. முடிவில்லாமல் இந்த விவகாரம் சென்றது..

குருமூர்த்தி

குருமூர்த்தி

இதற்கு பிறகுதான், திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு கருணாநிதி எழுதிய கடிதத்தை ஆதாரமாக வெளியிடப்பட்டது.. அப்போதும் ஒருசில முணுமுணுப்புகள் எழுந்தபடி இருக்க, திடீரென இதுபற்றி கருத்து சொன்னார் துக்ளக் குருமூர்த்தி. "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். நெருக்கடி நிலை முடிந்து, அதன் பிறகு நடந்த 1977ஆம் ஆண்டு தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்காக நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன். அவர் மிசா ஸ்டாலின் தான்" என்று தெரிவித்து இந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.

அரும்பு மீசை

அரும்பு மீசை

இப்படி ஒரு பரபரப்பான விவாதத்தை அன்று ஏற்படுத்திய நாள்தான் இன்று.. ஆம் மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நாள் இன்று. அரும்பு மீசை.. ஒல்லியான தேகம்.. சுருள் கற்றை முடிகள் நெற்றியில் புரள.. இளம்ரத்தம் நரம்பில் பாய.. துடிப்போடு காணப்பட்டார் அன்றைய முக ஸ்டாலின்!

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

நெருக்கடி நிலையை அனுபவித்தவர்களில் ஸ்டாலினும் ஒருவர்.. "சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு எங்களை அடித்தார்கள்.. இன்னும்கூட அந்த அந்த வடு என் கையில் இருக்கிறது. ஜெயில் ரூமில் 2 பானைகள்தான் இருக்கும்.. ஒரு பானையில் சிறுநீர் கழிக்க வைத்திருப்பார்கள். சில நேரம் சிறுநீர் கழிக்க வேண்டிய பானை நிரம்பி அறை முழுவதும் வழிந்து ஓடும்... கொடூர தாக்குதல் காரணமாக நான் மயங்கி விழுந்தேன்.

சிட்டிபாபு

சிட்டிபாபு

என்னுடன் சிறையில் இருந்த சிட்டிபாபு என் மீது அடி விழாமல் தடுத்திருக்கிறார். அண்ணன் சிட்டிபாபுவை படுக்க வைத்து தாக்கி பூட்ஸ் காலால் தாக்கி வயிற்றில் போலீசார் மிதித்தனர். அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. ஆபரேஷன் நடந்தும் உயிர் பிழைக்கவில்லை.. இன்று நான் உயிருடன் இருக்க காரணம் சிட்டிபாபுதான்" என்று ஸ்டாலினே பலமுறை கண் கலங்கி சொல்லி உள்ளார்.

ட்வீட்

இன்றைய நாள்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது.. இதைதான் டிஆர்பி ராஜா தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். "#மிசா வை எதிர்கொண்ட போர்வீரன் எங்கள் #தலைவர் @mkstalin அவர் அந்த கொடூர சட்டத்தில் கைது செய்யப்பட்ட நாள் இன்று #MKStalin" என்று பதிவிட்டு, அத்துடன் ஸ்டாலினின் அப்போதைய போட்டோ ஒன்றையும் போட்டுள்ளார்.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

சிறையில் இருந்து வெளியே வந்த நேரமா, அல்லது போராட்ட நேரமா தெரியவில்லை.. ஸ்டாலினின் முகத்தில் தாடி வளர்ந்திருக்கிறது.. முகம் களைத்து காணப்படுகிறது.. ஆனால் போர்க்குணம் மட்டும் மாறாது என்பது போன்ற மிரட்டலுடன் காணப்படுகிறார் ஸ்டாலின்.. டிஆர்பி ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+