சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவை நோக்கி பாஜக அண்ணாமலை கிளப்பிவிட்ட கச்சத்தீவு பிரச்சனை... வாங்கி கட்டுவது என்னவோ அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை கோர்த்துவிட நினைத்தார் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை. ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிய சரத்து 6-ஐ நீக்கியதே அதிமுக ஆட்சி செய்த 1976-ம் ஆண்டுதான்; ஆகையால் தமிழர் உரிமைகளை பறித்தது அதிமுக அரசுதான் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான். கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.

2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து கச்சத்தீவு சிக்கலுக்கு தீர்வு- ஜரூர் முயற்சியில் மத்திய பாஜக அரசு? 2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து கச்சத்தீவு சிக்கலுக்கு தீர்வு- ஜரூர் முயற்சியில் மத்திய பாஜக அரசு?

மத்திய பாஜக அரசு

மத்திய பாஜக அரசு

அதேநேரத்தில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சத்தீவில் தமிழர் உரிமையை நிலைநாட்டுகிற 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் 6-வது சரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் அல்லது கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இலங்கையிடம் இந்தியா பெறுதல் என்கிற இரு வியூகங்களுடன் மத்தியில் ஆளும் பாஜக அரசு காய் நகர்த்தி வருவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை மீது பய்ச்சல்

அண்ணாமலை மீது பய்ச்சல்

இந்நிலையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு என்ன செய்தது? எப்படியெல்லாம் எதிர்த்தது- தமிழர் உரிமை பறிப்புக்கு காரணமானது அதிமுகதான் என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளரும் எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் எழுதியிருப்பதாவது: திமுகதான் கச்சத்தீவை தாரை வார்த்தது என்று அதிமுக காலகாலமாக செய்து வரும் பொய்ப் பரப்புரையை நேற்று அண்ணாமலை கொஞ்சம் இரவல் வாங்கிக்கொண்டிருந்தார்.

கருணாநிதி எதிர்ப்பு

கருணாநிதி எதிர்ப்பு

1974-ல் திமுக ஆட்சியில் இருந்தது. கச்சத் தீவு இலங்கைக்கு வழங்க1974-ல் திமுக ஆட்சியில் இருந்தது. கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அன்றைய முதல்வர் கருணா நிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

Recommended Video

    DMK-வின் Corruption பற்றி Annamalai பரபரப்பு தகவல் | #Politics | OneIndia Tamil
    அதிமுக, திமுக

    அதிமுக, திமுக

    கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் இரா.செழியன் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால், கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து போடகூட அதிமுக மறுத்துவிட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார்.

    English summary
    DMK has replied to Tamilnadu BJP Cheif Annamalai on Katchatheevu row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X