சென்னையில் வெறும் 2 சீட்டுதான்.. மொத்தமா காலியான திமுக! காரணமே இதுதான்!
சென்னை: சென்னை என்பது பூர்வீக மக்களின் இடம். இங்கிருந்து அவர்களை காலி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிதான் தற்போது சென்னையில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதற்கான காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, 48 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. 60 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. விரைவில் இந்த தொகுதிகளிலும் வெற்றி உறுதி செய்யப்படும். மொத்தமாக 108 தொகுதிகளில் வெற்றி பெறும்.

மறுபுறம் திமுக வெறும் 60 இடங்களில் சுருங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் சேப்பாக்கம் மற்றும் துறைமுகம் என 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் திமுக தமிழ்நாடு முழுவதும் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதுவும் சென்னையின் துறைமுகம் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த முறை 60 தொகுதிகளில் ஜெயித்திருந்தாலும், வெறும் சென்னையில் 16 தொகுதிகளில் வெறும் 2ல் மட்டும்தான் திமுக ஜெயித்திருக்கிறது. இப்படியாக திமுக மீண்டும் 1991க்கு திரும்பியிருக்கிறது.
இந்த அளவுக்கு தோல்விக்கு காரணங்கள் என்ன? எங்கு சறுக்கியது திமுக என்பதை அரசியல் விமர்சகர்கள் லிஸ்ட் போட்டு வருகின்றனர்.
முதல் காரணம் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை மதிக்காமல் கலைத்ததுதான். பணி நிரந்தரம், நியாயமான ஊதியம், இதர உரிமைகளை கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கூவம் ஆற்றில் இறங்கி அவர்கள் நடத்திய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால்டு, இந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், வலுகட்டாயமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு காவல்துறையை கொண்டு கலைத்தது. இது சென்னை மக்கள் மத்தியில் தீராத ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல, சென்னையின் வளர்ச்சிக்காக உழைத்த மக்களை, சிங்கார சென்னை வளர்ச்சி திட்டம் என்கிற பெயரில் சென்னைக்கு வெளியே அடுக்குமாடி கட்டி குடிவைத்ததது, குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி கட்டிடங்களை குடியிருக்க காசு கேட்டது, அதிமுக ஆட்சியில் இருந்த அதே வெள்ளம் வடியாத உட்கட்டமைப்புகள், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாதது என எல்லாம் சேர்த்து சென்னை மக்களை கொந்தளிப்பில் வைத்திருந்திருக்கிறது.
இந்த கொந்தளிப்புதான் விஜய்க்கு வாக்காக சென்றிருக்கிறது. ஒருவேளை திமுக இந்த விஷயங்களை சரியாக அணுகியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications