போராட்ட களமாக மாறிய தமிழகம்..திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல்! அதிரடியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல், கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை எனவும், இந்த தேர்தலுடன் மக்கள் திமுகவுக்கு விடை கொடுத்து விடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெயின் சமூக பாரம்பரியம் படி எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் சாபா கட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து மணமக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி," திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல், கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை.
தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. தமிழகமே போராட்ட களமாக மாறிவிட்டது. திமுக மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலுடன் மக்கள் திமுகவுக்கு விடை கொடுத்து விடுவார்கள்." என்றார்.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications