ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப்போறாரு... திமுக மேடையில் இடம்பெற்ற புதிய லோகோ..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மேடையில் ஸ்டாலின் தான் வாராரு; விடியலை தரப்போறாரு என்ற முழக்கத்துடன் கூடிய புதிய லோகோ இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக சார்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இப்போது புதிய பிரச்சார வாசகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதி மக்களுக்கு ஏற்றவாறு அவர்கள் மத்தியில் எளிதாக பிரச்சார வாசகம் சென்று சேருமாறு இந்த வரிகள் அமைந்துள்ளன.

திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

திமுக மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், என சுமார் 2,000 நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால் தேர்தல் பரப்புரையில் திமுக நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டி இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனிடையே இந்தக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையின் பின்னணியில் ஸ்டாலின் தான் வாராரு; விடியலைத் தரப்போறாரு என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. ஐ-பேக் நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 புதிய லோகோ

புதிய லோகோ

நமக்கு நாமே, விடியட்டும் முடியட்டும், ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற வரிசையில் இப்போது ஸ்டாலின் தான் வாராரு; விடியலை தரப்போறாரு என்ற லட்சினை சேர்ந்துள்ளது. முழுக்க கிராமப்புற மக்கள் மத்தியில் எளிதாக இந்த பிரச்சாரம் சென்றடையும் வகையில் வரிகள் அமைந்துள்ளது.

 இணையதளம் தொடக்கம்

இணையதளம் தொடக்கம்

மேலும், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற புதிய முழக்கத்தை காணொலி மூலம் வெளியிட்ட ஸ்டாலின் அது குறித்த இணையதளம் முகவரியையும் வெளியிட்டார். இதனிடையே கார்ட்டூன் மூலம் எடுக்கப்பட்ட குறும்படங்கள் வாயிலாக அதிமுக அரசின் குறைகளும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+