ஜன. 21ல் திமுக அவசர செயற்குழு.. கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க திடீர் அழைப்பு
சென்னை: திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இன்று இரவு, அக்கட்சி பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காதது, காங்கிரஸ் தலைமை திடீரென திமுகவை குற்றம் சாட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், காங்கிரஸ் நெருக்கம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள்.. போன்றவற்றுக்கு மத்தியில்தான், அவசர செயற்குழு கூட்டத்திற்கு, ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவசர செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று, அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பது, முன்னதாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் போன்றவை குறித்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications