ஒரே போடு.. திமுக வாக்குறுதியில் சேர்க்கப்பட்ட 3 புதிய அறிவிப்பு.. சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. செக்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழலை மையமாக வைத்து மூன்று புதிய அறிவிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக நேற்று திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தின் நிகழ்கால, எதிர்கால சவால்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வாக்குறுதிகளாக இதில் இடம்பெற்று உள்ளன. வேளாண்மை, கல்வி, மொழி, கடன் தள்ளுபடி, சமூக நீதி, மாணவர் நலன் என்று பல விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த தேர்தல் அறிக்கையை திமுக உருவாக்கி உள்ளது.

மாற்றம்
இந்த நிலையில் திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழலை மையமாக வைத்து மூன்று புதிய அறிவிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில்.. திராவிட கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், "விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது" என்பதை இணைத்து உள்ளோம். இந்த நிலையில் திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழலை மையமாக வைத்து மூன்று புதிய அறிவிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில்.. திராவிட கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், "விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது" என்பதை இணைத்து உள்ளோம்.

வாக்குறுதி
அதோடு வாக்குறுதி 367-ல், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது" என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:

குடியுரிமை
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.* இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

சட்டம் எதிர்ப்பு
இந்த சட்டத்தை எதிர்த்ததோடு மட்டுமின்றி - நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று - அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்திருக்கிறது. அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.

திரும்ப பெற வேண்டும்
எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு - அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்., என்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம், சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆகிய மூன்றையும் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் திமுக இதை தன் வாக்குறுதியில் இணைத்து இருக்கிறது .












Click it and Unblock the Notifications