மார்ச் 8ல் திருச்சியில் நடக்கும் மாநாடு.. ஸ்டாலினுடன் மேடையேறும் ராகுல் காந்தி? திமுக தலைமை முடிவு!
சென்னை: மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே மேடையில் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்று தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பொதுவெளியில் கூறிவிட்ட போதும், காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தொடர்ச்சியாக திமுகவை நெருக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக தலைமை காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்பதை நேரடியாக கூறிவிட்டு, உடனடியாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.
அதற்கேற்ப தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் நேரடியாகவே மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்தார். இதனால் கடந்த 2 நாட்களாகவே ஆட்சியில் பங்கு தொடர்பாக மாணிக்கம் தாகூர் பேசாமல் அமைதி காக்கிறார். இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் சென்னை வந்தார்.
எவ்வளவோ முயற்சித்த போதும் கேசி வேணுகோபாலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை. இருப்பினும் கேசி வேணுகோபால், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தனி நபர்கள் சொல்லும் கருத்து கட்சியின் கருத்து கிடையாது. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று அறிவித்து சென்றார். இது திமுகவினருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் 3 நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்து, மார்ச் 8ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்ற திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. இதனிடையே இந்த கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரையும் ஒரே மேடையில் உரையாற்ற வைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்த சிக்கலும் இல்லை.. இணக்கமாக இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாக இந்த மாநாட்டினை நடத்த திமுக தயாராகி வருகிறது.
-
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications